மூலவர்

ஏகாம்பரநாதர் கோயில்

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி அம்மை (அருள்மிகு காமாட்சியம்மை) இடங்கொண்ட
அருள்மிகு ஏகாம்பரநாத சுவாமியின் மன்மத ஆண்டு(பசலி 1425)

பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா

திருஞானசம்பந்தர்

மறையானை மாசிலாப் புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடா ணாகிய பெம்மானை
இறைவானை யேர்கொள்கச் சித்திரு ஏகம்பத்
துறைவானை யல்லதள் காதென துள்ளமே.

திருநாவுக்கரசர்

ஒதுவித் தாய்முன் அறவுரை காட்டி அமணரொடே
காதுவித் தாய்கட்ட நோய்ப்பிணி தீர்த்தாய் கலந்தருளிப்
போதுவித் தாய்நின் பணிபிழைக் கிற்புளி யும்வளாரால்
மோதுவிப் பாயுகப் பாய்முன் வாய்கச்சி யேகம்பனே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

ஏல்கலின்றி இமையவர் கோனை ஈசனை வழிபாடு செய் வாள்போல்
உள்ளத்துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட வஞ்சி வெருவியோடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே.

மாணிக்கவாசர்

காசு அணிமிங்கள், உலக்கைஎல்லாம் காம்பு அணிமிங்கள் கறைஉரலை
நேசம் உடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தி,
தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித் திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடி
பாச வினையைப் பறித்து நின்று, பாடி பொற்கண்ணம் இடித்தும் நாமே!

மெய்யன்புடையீர்,

"தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பன் செம்பொற்கோயில்" என மாணிக்கவாசகப் பெருமானால் புகழ்ந்தோதப் பெற்று விளங்கும் இத்திருத்தலம் தெண்ணீர் வயற்றொண்டை நன்னாட்டில், திருவருள் நெறித் தமிழ்மறையாம் தேவாரத் திருப்பதிகங்களைப் பெற்றதும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஈசனைப் பாடி இடக்கண் பெற்றதும், பொன் வேண்டித் திருப்பதிகம் பாடிப்பொன் பெற்றதும், திருக்குறிப்புத் தொண்டர், சாக்கிய நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் முதலிய திருநெறித் தவத்தொண்டர்கள் முக்தியடைந்ததும், அற்புதங்கள் பல நிறைந்ததுமாகிய அரும்பெரும் காஞ்சிமாநகரின்கண் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கும் எம்பெருமான் (அருள்மிகு ஏலவார்குழலி அம்மை இடங்கொண்ட அருள்மிகு ஏகாம்பரநாதப் பெருமானுக்கு பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா நாளது மன்மத வருஷம் மாசி மாதம் 30-ஆம் தேதி 13-03-2016 ஞாயிற்றுக் கிழமை பஞ்சமி திதி பரணி நட்சத்திரம் கூடிய சுபதினம் காலை 5-00 மணிக்குமேல் 6-30 மணிக்குள் சர்வ சுபமங்களம் கூடிய கும்ப லக்கினத்தில்) கொடியேற்றம் செய்து கீழ்க்காணும் நிகழ்ச்சி நிரலின்படி மிகச் சிறப்பாக நடைபெறும். அன்பர்கள் அனைவரும் வந்து திருவிழாவிற் பங்கேற்று இறையருள் பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்.

SCHEDULE OF THE PANGUNI UTHTHIURAM FESTIVAL

26-03-2016 14-ம் திருவிழா அன்று இரவு 8 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை ஸ்ரீலஸ்ரீ காசிவாசி முத்துக்குமார ஸ்வாமி தம்பிரான் சுவாமிகள் ஸ்ரீகாசி மடம் அவர்களின் அருளாணைப்படி, திருமுறைப் பாராயணம் திருவீதி நான்கிலும் நிகழும் மன்மத வருடம் பங்குனி மாதம் 28-ஆம் தேதி 10-04-2016 ஞாயிற்றுக் கிழமை இரவு பெரிய விடயாற்றி புஷ்ப பல்லக்கு உற்சவம் உபயதாரர்: ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் விஸ்வரூப தரிசன சபா டிரஸ்ட், காமாட்சி அம்மன் சன்னதி தெரு, காஞ்சிபுரம்.

பிரதிதினமும் மாலை 6-00 மணிக்குமேல் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா கலையரங்கம் மற்றும் நால்வர் கலையரங்கத்தில் பெரும் புலவர்களால் சைவ சமயச் சொற்பொழிவுகளும், இரவு இன்னிசைக் கருவிகளுடன் தேவார பாராயணமும், நாதசுவரக் கச்சேரிகளும், தண்டலம் ஸ்ரீ சுப்பிரமணிய ஐயர் அவர்களின் தரும ஸ்தாபனத்தாரால் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் வேத பாராயணமும் நடைபெறும். காலை மாலை பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா புறப்பாடும் உண்டு.

இங்ஙனம்

திரு வை. முருகேசன்
செயல் அலுவலர்,
அ/மி ஏகாம்பரநாதர் ஆலயம், காஞ்சிபுரம்.
போன்: 27222084
திரு ஜெ. பரணிதரன், பி.ஏ., பி.எல்.,
தக்கார்/உதவி ஆணையர்,
இ.ச.அ. துறை, காஞ்சிபுரம்.

ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள், உபயதாரர்கள் மற்றும் காஞ்சிபுரம் நகரத்தார்கள்.

SEE THE PRINTED NOTICE
(Click the image for a larger view)

Post your comments to Facebook