மூலவர்


திருக் கயிலாயம்
ஏகாம்பரநாதர் கோயில்

திருச்சிற்றம்பலம்

ஏகாம்பத்துறை எந்தாய் போற்றி

மாதவம் செய்த தென்திசை என்றார் சேக்கிழார் பெருமான். அத்தென் திசையில் தொண்டை நாட்டின் திலகமாகத் திகழ்வது காஞ்சியம்பதி. பழமைக்கும் பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் இன்றும் திகழும் நகரம் காஞ்சிபுரமேயாகும். கலைவளர் காஞ்சி. விழவறாக் காஞ்சி, பல்கலை கொண்ட காஞ்சி எனப புகழ்ந்தேத்தும் அப்பதியில் திருக்கோயில் கொண்டு உலகம் உய்ய அருள்பாலிப்பவரே திருவேகம்பப் பெருமான்.

ஏகம்+ஆம்ரம்=ஏகாம்பரம் ஒப்பற்ற ஒரு மாமரம். அதன் அடியில் எழுந்தருளி உள்ளவர் என்ற சிறப்பினாலேயே ஏகாம்பரநாதர் என்ற பெயரினைப் பெற்றுத் திகழ்கின்றார்.

உச்சிக்கு மிஞ்சின நேரமுமில்லை
கச்சிக்கு மிஞ்சின பநியுமில்லை

என்று காஞ்சியம்பதியைச் சிறப்பிக்கும் பழமொழிக்கிணங்க இந்நகரில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் இறைவன். முத்தி தரும் நகர் ஏழில் முதன்மையானது காஞ்சிபுரமேயாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்று சிறப்புக்களையும் பெற்றுத் திகழ்வதும் இந்நகரமே. கி.பி. 150 முதலே இந்நகரம் புகழ்பெற்றத் திகழ்கின்றது. வடமொழிக் கவிஞர் காளிதாசன் "நகரெனப்படுவது காஞ்சி நகரே" எனச் சிறப்பித்துக் கூறினார். வரலாற்றுச் சிறப்புக்கள் பல கொண்டு திகழ்வது இப்பதியாகும்.

மாமரத்தின் மூலத்தில் முகிழ்த்த எம்மான்

சிவபெருமான் கயிலையில் வீற்றிருந்தபோது உமாபரமேட்டியான பார்வதி அங்கே விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் இரு கரங்களால் மூடினார். அவ்வளவில் எல்லா உலகங்களிலும் இருள் சூழ்ந்து கொண்டது. உடனே சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைத் திறந்து இருளை அகற்றினார்.

பார்வதி தம் விளையாட்டு வினையானதை எண்ணி அறியாமல் செய்த பிழையை மன்னித்தருள சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் பார்வதியில் குற்றத்தைப் போக்கப் பார்வதியின் வேண்டுகோளின்படி சைவ சித்தாந்தத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லித் தம்மை ஆகமத்தின்படி பூசிப்பதுதான் சிறந்த வழி என்று எடுத்துரைத்தார்.

என்னிலாகம்பம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மையாவது பூசனை என உரைத்தருள
அண்ணலார் தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்
பெண்ணில் நல்லவளாயின பெருந்தவக் கொழுந்து

- பெரியபுராணம்

காஞ்சிபுரம் தலவரலாறு

பார்வதி பரமசிவனை அர்ச்சிக்க விரும்பினார். அவர் கயிலாயத்தை விட்டுக் காஞ்சிக்கு வந்தார். கம்பையாற்றங்கரையில் மண்ணில் சிவலிங்கத்தைச் செய்து பூஜித்து வந்தார். அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான், காஞ்சியில் ஒரு மாமரத்தின் மூலத்திலிருந்து தோன்றினார். பார்வதியின்மேல் மனம் போக்கினார். உமையோ தவனிலையிலேயே மூழ்கியிருந்தமையால், தவத்தைக் கலைக்க எண்ணிய சிவபெருமான், கொட்டிச் சேதம் என்ற திருநடனத்தை ஆடினார். அப்போது அவர்தம் கையில் உடுக்கையும், காலில் தண்டையும் ஒலித்தன.

கண்கள் ஆயிரம் திருக்குறிப்புகளைப் புலப்படுத்தின. எட்டுத் திசைகளிலும் சடைகள் பறநதன.

எனினும் பார்வதியோ ஆடாமல் அசையாமல் அப்படியே தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அதைக்கண்ட சிவபெருமான் பார்வதியைப் பயமூட்ட எண்ணிச் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கம்பையாற்றில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வரும்படி செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம் கண்டு பார்வதி தன்னால் பூசிக்கப்படும் இலிங்கம் தண்ணீரில் அடித்துச் செல்லாதபடி சிவலிங்கத்தைக் கைகளால் அணைத்துக் கொண்டார். அப்போது சிவபெருமானார் மாமரத்தின் அடியில் பவளக்கம்பம் போல் தோன்றி அம்மைக்கு அருள்பாலித்தார்.

திருமால் தன் தங்கை காமாட்சியைத் திருமணம் செய்து கொடுத்தார். சிவபெருமான், உமையம்மை வேண்டிய வரத்தைக் கொடுத்தார். மேலும் இரண்டு நாழி நெல் கொடுத்து அதைக் கொண்டு முப்பத்திரண்டு அறங்களைச் செய்தார்.

இந்த வரலாறே திருவேகம்பர் திருக்கோயிலின் சிறப்புமிகு வரலாறாயிற்று. இந்த வரலாற்று உண்மையே

நலமலி மங்கை நங்கை விளையாடி யோடி
நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழுமுற்றும் இருள் மூட மூட
இருளோட நெற்றி ஒருகண்
அலர்தர அஞ்சி மற்றை நயனங்கை விட்டு
மடவான் இறைஞ்ச மதிபோல்
அவர்தரு சோதி போல அலர்வித்த மூக்க
ணவனா நமக்கோர் சரணே

(4 ஆம் திருமுறை பொதுப்பாடல் - 8)

என்று பாடிய அப்பர் திருவாக்கால் அறியலாம் மேற்கண்ட நிகழ்ச்சியை

"மலை மடந்தை விளையாடி வளையாடு கraத்தால் மகிழ்ந்தவன் கண் புதைத்தலுமே!"

என்று பாடலில் சுந்தரர் பெருமானும் பாடி இருப்பதைக் காணலாம். மற்றும் பட்டினத்துப் பிள்ளையார் திருவேகம்பமுடையார் திருவந்தாதியிலும், மும்மணிக்கோவையிலும் மேற்கூறிய நிகழ்வுகளைப் பாடி பரவசமடையவதைக் காணலாம். பாரதம் பாடிய பெருந்தேவனார் அகநானூற்றுக் கடவுள் வாழ்த்தில்

நுதவ திலையா நாட்டம் .........சேர்ந்தோள்".

உமையே என்று கூறி இருப்பதைக் காணலாம். தவிரவும் திருமந்திரத்திலும், பெரியபுராணத்திலும் மேற்கூறிய வரலாற்று நிகழ்வுகளைப் பேசி இருப்பதைக் காணலாம்.

இறையாணையை இறைவியேற்றாள்.

பிழைக்குப் பரிகாரமாக இறைவனை திருவாய் மலர்ந்ததைப் பெரியபுராணம்.

"தேவதேவனும் அதுதிரு வுள்ளஞ்செய்து
தென்திசை மிக்கசெய் தவத்தால்
யாவ ருந்தனை அடைவது மண்மேல்
என்றும் உள்ளது காஞ்சி மற்றதனுள்
மாவ மர்ந்ததம் இருக்கையில் அணைந்து
மன்னுயூசனை மகிழுந்து செய் வாய் என்று
ஏவ எம்பெரு மாட்டியும் பிரியா இசைவு
கொண்டெழுந் தருளுதற் கிசைத்தாள்"

- பெரியபுராணம், திருக்குறிப்புத்தொண்ட நாயனார்.

என்ற பாடலில் எடுத்தியம்புவதைக் காணலாம். இதனால் சிவபெருமான் விரும்பி உறையும் இடம் காஞ்சி என்பதும். காமாட்சி அறம் செய்து சிறந்த இடம் சிஞ்சி என்பதும், திருவேகம்பம் சிறப்புக்குரித்தான தலம் என்பதும் பெறப்படும். அன்னை காமாட்சி ஏகாம்பரநாதரை வழிப்பட்டனள். சுந்தரர் பெருமான் தம் திருப்பாடல்களில் பன்முறை, உமைதங்கை ஏந்தி வழிபடப்பெற்ற கம்பன் என்று கூறியுள்ளார். இதனால் சிவபெருமான் ஆணையை அன்னை ஏற்றுக் காஞ்சியிலே வந்து மாவடிகீழ் மகிமை பெற்றாள் என்பதை நாம் அறியலாம்.

பெரிய திருமடலில் பெரியோனின் பெரும்புகழ்

கடுத்தவம் இருந்த காமாட்சி நிலையை.

"மண்ணும் மலையரையன் பொற்பாவை வாணிலா
மின்னும் மணிமுறுவல் செய்வாய் உமையென்னும்
அன்ன நடைய அணங்கு நுடங்கிடைசேர்
பொன்னுடம்பு வாடப் புலனைத்தும் நொந்தகல
தன்னுடைய கூழைச் சடாபாரம் தாந்தரித்தாங்
கன்ன அருந்தவந்தி னூடுபோய் ஆயிரந்தோள்
மன்னு கரதலங்கள் மட்டித்து மாதிரங்கள்
மின்னி எரிவீச மேலேடுத்த சூழ்கழற்கால்
பொன்னுலகம் ஏழும் கடந்தும்பர் மேல்சிலம்ப
மன்று குலவரையும் மாருதமும் தாரகையும்
தன்னி னுடனே கழலச் சுழன்றாடும்
கொன்னவிலும் மூவிலைவேல் கூத்தன் பொடியாடி
அன்னவன்றன் பொன்னகலம் சென்றாங் கணைந்திலளே"

- பெரிய திருமடல், பாடல் 32

என்ற பாடலில் திருமங்கை ஆழ்வார் பிறவாயாக்கைப் பெரியோன்தன் சிறப்பை எடுத்துக் கூயிருப்பதையும் காணலாம், மற்றும் ஐம்பெறும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் திருவேகம்பப் பெருமான் ஆடிய கொட்டிச் சேதம் நடனம் பற்றி வரும் குறிப்புகள் சிறப்புக்குரியன.

கண்ணுதலோன் கண் அளித்தான்

வன்தொண்டராம் சுந்தரர் பெருமான் திருவொற்றியூரில் சங்கிலியாரிடம் அவரைவிட்டுப் பிரியமாட்டேன் என்று வாக்குக் கொடுத்து மணம் புரிந்தார். பின்னர் அவர் சங்கிலியாரை விட்டுப்பிருந்து திருவொற்றியூரை நீங்கியதும் அவருடைய கண்கள் பார்வையை இழந்தன. பின் சுந்தரர் பெருமான் காஞ்சியை அடைந்து திருவேகம்பத்தில் இறைவனை வழிபட்டுப் பல பாடல்களைப் பாடினார். மனம் உருகப் பாடிய அப்பாடல்களைக் கேட்ட இறைவன் இடக்கண்ணை அளித்தான். எனவே எம்பெருமானின் பிழை பொறுக்கும் தன்மையினையும், அருள்பாலிக்கும் தன்மையினையும் இதனால் அறியலாம்.

முக்தி நல்கும் முதற்பொருள்

அங்காடிக் குக்கல் போல், ஆழித்துரும் பெனவே அல்லல்படும் வாழ்வு மனித வாழ்வு - அவ்வாழ்வு - நல்வாழ்வாக நிறைவு அடைய முயற்சிப்பதும் அதனின் முக்கிய முடிவுமே முத்திநிலை. அத்தகைய முத்திப்பேறு காஞ்சியிலேயே கிட்டும் என்பது ஆன்றோர் கொள்கை. அதனாலேயே சான்றோர் முத்திதரும் நகர் எழில் முதன்மையானது காஞ்சி எனவும் அம்முத்தியை அளிக்க வல்லவர் திருவேகம்பரே எனவும் அறிந்து கூறினர். இடர்கெடுக்க வல்லவர் ஏகம்பர் என்பதை ஞானசம்பந்தப் பெருமான்

"வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளரவம் அணிந்த
தாணிடத் தினில் வாழ்க்கை பேணி தருதலையிற் பலிதேர்ந்து
ஏணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவலூர்
சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பம் சேர இடர்கெடுமே."

1 ஆம் திருமுறை - 8

எனப் பாடிப் பணிந்தார்.

அவ்வாறு பணிந்து இடர்கெடுத்து இத்தலத்தில் முக்திபெற்றோரில் நாயன்மார் மூவர்.

சாக்கியர்

புத்தமதத்தை சார்ந்திருந்தும் அன்றாடம் ஈசன் மீது கல்லை ஏறிந்து வழிபடுவார் சாக்கியர். ஆனால் அதை உள்ளன்போடு நினைத்து எறிந்ததால் அது இறைவனுக்கு மலராயிற்று. உணவுக்குமுன் கல்லெறிந்து வழிபடும் அவர், ஒருநாள் அதை மறந்து உண்ணப் புகுந்தார். அப்போது கல்லெறியும் நினைவு வர எழுந்து வந்து சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்தார். இறைவன் அன்பரின் பக்தியை எண்ணி வானில் காட்சி தந்து அருள் பாலித்தார்.

திருக்குறிப்புத் தொண்டர்

சலவைத் தொழிலானியான இவர் ஏகம்பன் மேல் அளவிடற்கரிய பக்தி கொண்டவர். சிவனடியார்களின் ஆடைகளை அழுக்கு நீக்கிக் கொடுப்பதைத் தனது பாக்கியமாகக் கொண்டு அப்பணியைச் செய்து வந்தார். இறைவன் சிவனடியார் வேடத்தில் அழுக்குத் துணியைக் கொடுத்து அன்று மாலைக்குள் துவைத்து உலர்த்தித் தருமாறு கேட்டு உறுதியையும் பெற்றார். சிவன் தன் திருவிளையாடலால் அன்று முழுவதும் மழையைப் பெய்யச் செய்தார். சலவைத் தொழிலாளியான அவர் தன் வாக்கு தவறியதை எண்ணி வேதனை கொண்டு துணி துவைக்கும் கல்விலேயே தன் தலையை மோதி நாயனார் உயிர்விடத் துணிந்தார். அப்போது திருவேகம்பர் காமாட்சியோடு எழுந்தருளிக் காட்சி தந்தார்.

பாடலால் பதம் பெற்றார் ஐயடிகள் காடவர்கோன்

காஞ்சியை அரசு புரிந்தவர் பல்லவ மன்னராவார். இவர் பல சிவத்தலங்களுக்குச் சென்று இறைவன் மீது வெண்பா பாடிப்பணி செய்து வந்தவர். இவர் இறைவனால் முத்திப்பேறு பெற்றார்.

நாவுக்கரசர் போற்றிய நால்வேதப் பொருள்

நாவுக்கரசர் என்று போற்றப்படும் அப்பர் சுவாமிகள் கச்சிப் பெருமானை மனத்திலே வைத்துப் போற்றியதை.

"அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே"

என்று பாடியதனால் அறிந்து கொள்ளலாம். கச்சியேகம்பரைத் தலையினால் வணங்கக் கூடியவர்கள் "தலைவர்க்குத் தலைவர் ஆவார்" என்றும், கையினால் தொழ வல்லவர்கள் "கடுவனையைக் களைவர்" எனவும் வருந்தி நின்று அடிமை செய்பவர்கள் "வல்லினையை வாய்ப்பர்" என்றும் பாடி உள்ளதால் திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க பற்றைவிடச் சிறந்தவழி பற்று அற்றவனாகிய திருவேகம்பப் பெருமானின் பற்றைப் பற்றிக் கொள்ளலே ஆகும். வினையின் நீங்கி விளங்கிய அறிவனாகிய எம்பெருமான் பக்தர் தம் பாசவினையை அறுக்கும் தன்மையராகத் திகழ்கின்றார்.

பெருங்காஞ்சிப் பிஞ்ஞகன்

பெரிய காஞ்சிபுரம் என்ற சொல் பரப்பளவுக்கான காரணப்பெயராகத் தெரியவில்லை. மிகப் பழமை வாய்ந்த பெருமை வழக்காகவே வழங்கி வருதலைக் காணலாம். ஏகாம்பரநாதர் எழுந்தருளி உள்ள பகுதி பெரிய காஞ்சிபுரம் என்று அப்பர் காலத்திலேயே வழங்கப்பட்டது என்பதனை.

"பெருங்காஞ்சி எம் பிஞ்ஞகனே"

என்று அவர் பாடியுள்ளமையால் அறிய முடிகின்றது.

உயர்வுகாட்டி உய்விக்கும் உயர்குணாளன்

"வாரணம் பொருதமார்பும் வரையினை எடுத்ததோளும்
நாரத முனிவர்க்கேற்ப நடம்பட உரைத்த நாவும்"

உடையவன் இராவணன். பெருவரங்கள் பெற்றிட்ட செருக்கால் தடுத்து நின்ற இமயமலையைத் தன் தோள்வலி கொண்டு அசைத்திட - பெயர்த்திட எண்ணினான். தன் தோனினால் இமயத்தைப் பெயர்க்க முயற்சி செய்தான். எம்பெருமான் தம் மெல்லிய திருவடியின் விரல் ஒன்றினால் ஊன்றினார். அப்போது அவன் மிகவும் நடுங்கிச் சிக்குண்டு வேதனையாற்றாது கலங்கினான். தன்னைக் காப்பாற்றக் கச்சியேகம்பனே என்று அபயக் குரல் எழுப்பினான். அதைக் கேட்ட எம்பெருமான் அவன் துயர் நீக்கி உய்யும் வகை செய்தருளினார்.

இந்த வரலாற்றை அப்பர் பெருமான் கச்சிப்பதிகத் திருக்குறுந்தொகையில் இராவணன் ஏகம்பரை நினைத்தே உய்ந்தனன் என்பதனை.

"இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன்
விலங்க லைஎடுக் கவ்விர லூன்றலும்
கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே"

என்று பாடல் வழி எடுத்துரைத்துள்ளார்.

காமாட்சி வழிபட்ட கம்பன்

இறைவனால் காஞ்சிக்கு அனுப்பபட்ட காமாட்சி காமகோட்டம் நிறுவி 32 அறங்களைச் செய்து ஏகாம்பரநாதரை நாடொறும் வழிபட்டு வந்தாள். காஞ்சி மண்டலம் முழுமைக்கும் தேவி காமாட்சியே ஆவான். எனினும் ஒவ்வொரு கோயில்களிலும் திருவிழாக்காலம் புறப்பாட்டிற்காகவும், வழிபாட்டிற்காகவும் அம்மனின் அம்சமாக உற்சவமூர்த்தியொன்று காஞ்சிக் கோயில்களில் அமைந்திருக்கும். அவ்வகையில் அமைந்துள்ள இத்தலத்து இறைவியின் பெயர் ஏலவார் குழவி என்பதாகும். சுந்தரர் தம் தேவாரத்தில்.

"ஏவலார் குழலாளுமை நங்கை
யென்றும் ஏந்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்ப னெம்மானைக்
காணக்கண் ணடியேன் பெற்றவாறே"

என்று இத்திருப்பெயரையமைத்துப் பாடியுள்ளார்.

பங்குனி உத்திரத்தில் பயன் கொடுப்பார் பரமசிவன்

விழவாறக் காஞ்சி எனப் பெயர் பெற்றது. இந்நகரமே, நாள்தோறும் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் நகர் இது. இக்கோயில் விழாக்களில் பெரிதும் சிறப்புக்குறியது பங்குனி. உத்திரப் பெருவிழாவாகும். அவ்விழாவின் பெருமை அளவிடற்கரியது.

பாலாறு என்னும் நதிக்கரையில் உள்ள திருப்பனங்காடு என்ற ஊரில் "சம்புவேதியர்" என்பவர் இருந்தார். அவர் ஆண்டுதோறும் காஞ்சிக்குச் சென்று ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாண உற்சவத்தைக் கண்டுகளித்து வந்தார்.

அந்த ஒரு புண்ணித்திற்காகவே முடிவில் சிவ கணங்கள் அவரை விமானத்தில் ஏற்றிச் சிவலோகம் அழைத்துச் சென்றார்கள். பக்தர்கள் பெருவிழாவில் கலந்து கொண்டு இன்புற்றாலே சிவலோக பதவி பெறும் வாய்ப்பு உண்டென்பதை இதனால் அறியலாம்.

திருக்கோயில் சந்நிதிகள்

ஏகாம்பரநாதர் கோயில் பரப்பளவு சுமார் 23 ஏக்கர் ஆகும். இதில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. பல்லவர், சோழர், விஜயநகர அரசர்கள் இக்கோயிலில் திருப்பணி செய்து ஏகம்பரை வழிபட்டு வந்துள்ளார்கள்.

"என்றும் உள்ள இந்நகர்கலி யுகத்தில்
இலங்கு வேற் கரிகாற்பெரு வளத்தோன்
வந்திற்றபுலி இமய மால்வரைமேல்
வைக்க ஏகுவோன் தனக்கிதன் வளமை
சென்று வேடான் முன் கண்டுரை செய்யத்
திருந்து காதநான் குட்பட வகுத்துக்
குன்று போலுமா மதில்புடை போக்கிக்
குடியிருந்தன கொள்கையின் விளாக்கம்"

- பெரிய புராணம், திருக்குறிப்புத் தொண்ட நாயனார் - 85

காஞ்சிபுரம் தல வரலறு

சேக்கிழார், சோழ அரசன் கரிகாற் பெருவளத்தான் இமயத்தில் புலி பொறிக்கப் படையெடுத்துச் சென்ற போது காஞ்சி மாநகரைச் சுற்றிக் குன்று போல் மதிலை அமைத்து மக்களைக் குடியேற்றியதாகக் கூறுகிறார்.

முதலாம் பராந்தகன் காலத்து வேலஞ்சேரி செப்பேட்டில் கரிகாலன் காஞ்சியில் அரண்மனை கட்டியதாகக் கூறப்படுகிறது.

கரிகாற் பெருவளத்தான் உறந்தையில் கோயில் கட்டி மக்களைக் குடியேற்றினான் (பட்டினப்பாலை 283-286). அவன் இடையாற்றுமங்கலம் என்றும் ஊரை விட்டு மக்கள் போகாதபடி நிலை நிறுத்தினான் (அகநானூறு 141).

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கரிகாற் பெருவளத்தான் ஏகாம்பரநாதர் கோயிலைப் புதுப்பித்துக் கட்டினான் என்பதற்குச் சான்றாக அவன் ஏகாம்பரநாதரைக் கைகூப்பி வணங்கும் அவனுடைய கற்சிலை கோயிலின் நுழையும் வாயிலின் வெளிப்புறாத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

பல்லவர்

கரிகாலனின் மகன் கிள்ளிவளனுக்கு நாகநாட்டு இளவரசி பீலிவளை பெற்ற மகன் தொண்டைமான் இளந்திரையன் என்பான். அவன் காஞ்சியிலிருந்து அரசு புரிந்தான். இவனுடைய வழியில் வந்தவர்களே பல்லவ அரசர்கள்.

முற்காலத்தில் கோயில்கள், செங்கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்டன. பல்லவ அரசர்கள் கோயில்களைப் புதுப்புத்துக் கருங்கற்களால் கட்டினார்கள். ஏகாம்பரநாதர் கோயிலில் ஆயிரக்கால் மண்டபத்தினை யொட்டி இரண்டாவது புற மதிற்சுவரில் கட்டப்பட்டிருக்கும் கோபுரத்திற்குப் பல்லவர் கோபுரம் என்று பெயர். இது பல்லவர்கள் ஏகாம்பரநாதர் கோயிலைக் கருங்கற்களால் புதுப்பித்துக் கட்டினார்கள் என்பதற்குச் சான்றாகும்.

விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயர் கி.பி 1509-ஆம் ஆண்டு இராஜகோபுரமும், மதிற்சுவரும் ஆயிரக்கால் மண்டபமும் கட்டுவிததார்.

நாட்டுக்கோட்டை நகரத்தார் இலட்சுமண செட்டியார் கி.பி 1880-ஆம் ஆண்டு இலட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து இக்கோயிலின் முதல் இரண்டு பிரகாரங்களிலும் கொடிமரம், நான்குகால், பதினாறுகால் மண்டபங்களிலும் தூண்களிலும் உயிரோவியச் சிற்பங்களை அமைத்துக் கலியழகுடன் கோயிலைப் புதுபித்துக் கட்டி வானுறையும் தெய்வத்துக்குப் புகழ் சேர்த்தார்.

இராஜகோபுரமும், பல்லவர் கோபுரமும் தெற்கு நோக்கிக் கட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு கோபுரங்களின் வாயில்களின் வலப்பக்கம் விநாகரும் இடப்பக்கம் மயில்மீது ஆறுமுகனும் வள்ளியும் தேவயானையும் சந்நநிதிகளில் காட்சி தருகின்றார்கள். ஆனால், கோயிலும் முலஸ்தானமும் கிழக்கு நோக்கிக் கட்டப்பட்டு வாயிலின் வலப்பக்கம் முருகனும் இடப்பக்கம் விநாயகரும் - அமைக்கப்பட்டுள்ளனர். மூலஸ்தானத்தில் ஏகாம்பரரும் காமாட்சியும் அமர்ந்திருக்க, அவர்களுக்கப் பின்னால் முதல் பிரகாரம், இரண்டாம் பிரகாரம் இரண்டிலும் மேற்குப் பகுதியின் தென்கோடியில் விநாயகரும், வடகோடியில் முருகனும் இருக்கும்படி கட்டப்பட்டுள்ளாது.

திருவேகம்பநாதர் - மூல இலிங்கம்

நச்சி நாளும் நயந்தடி யார்தொழு
இச்சையால் உமை நங்கை வழிபடக்
கொச்சை யார்குறு கார்செறி திம்பொழில்
கச்சி யேகம்ப மேகை தொழுமினே.

- அப்பர்திருகச்சியேகம்பம் 5 -ஆம் திருமுறை 1,2.

காமாட்சி காஞ்சியில் கம்பையாற்றங்கரையில் மாமரத்தின் கீழ் மணலில் இலிங்கம் செய்து பூஜித்து வந்தாள். அவள் பூசித்த மணல் சிவ்லிங்கமே மூலஸ்தானமாகும். இந்த இலிங்கத்துக்குப் பின்னால் திருவேகம்பர் சோமாஸ்கந்த வடிவில் எழுந்தருளியுள்ளார்.

பிரமனும் திருமாலும் வரிபட்டுத் தொழக் கச்சி ஏகம்பர் தேவியுடன் அமர்ந்திருப்பதாக அப்பரும், சம்பந்தரும் பாடியுள்ளனர்.

மூல இலிங்கம் மணலால் ஆனதால், காஞ்சி பிருதிவித்தலம் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்படுகிறது. ஆவுடையார்க்கு மட்டுமே அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. இராஜ கோபுர வாசல் கீழண்டை மதிலின் நடுப்பத்தியில் உள்ள கல்வெட்டில் இராஜாதி ராஜ ராய பரமேஸ்வர வெங்கிடபதி தேவமஹாராயர் பிரிதிவிராஜஜியம் பண்ணிய காலத்தில் பக்தர்கள் பூசைக்குக் கற்பூரம், புணுகு சட்டம், கஸ்தூரி, பன்னீர், குங்குமப் பூ, சாம்பிராணி, சல்லா பட்டு, பட்டாவணி வாங்கிக் கோயில் ஸ்ரீ பண்டாரத்திடம் கொடுத்த செய்தி, எழதப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் மணல் இலிங்கமானதால் தொன்று தொட்டு வாசனைப் பொருள்களும் புணுகுச் சட்டமுமே சாத்தப்பட்டு வருவதும் தெரியவருகிறது.

முதற் பிரகாரம்

"முத்திக்கு முதலிடம் முக்கண்ணன் அடியார்
எத்திக்கும் புகழ் பரப்பு ஏற்றமிகு நல்வரிசை
சித்தி அளிக்கும் விநாயக தரிசனம் என்றும்"

இப்பிரகாரம் கருவறையைச் சுற்றி அமைந்துள்ளது. இதில் வலம் வரும்போது, பிராகராத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவாயிலின் அருகில் தென்பக்கம் காஞ்சியில் முத்திபெற்ற திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனர், ஐயடிகள் காடவர்கோள் நாயனார் ஆகிய மூவரையும் தரிசித்து வணங்கும் வண்ணம் அவர்களுடைய கற்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அடுத்து பாலசந்திர விநாயகர், ஸ்படிகலிங்க மூர்த்தி, பிரளயங்காத்தநாதர் சிவலிங்கம்.

பிரகாரத்தின் தெற்குப் பகுதியின் கிழக்கு மேற்கு வரிசையில்

முதற்கண் ஓர் விமானத்தில் சமயக்குரவர்கள் நால்வர் (திருஞானசம்பந்தர்,திருநாவுக்கரசர்,சுந்தரமூர்த்தி,மாணக்கவாசகர்) காட்சி தருகின்றனர். இவ்விமானத்தின் சிகரத்திலும் இவர்களின் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்து அகத்தீஸ்வரர் சிவலிங்கம், பாலவிநாயகர், சமயக்குரவர் நால்வர் - தொடர்ந்து அறுபத்து மூன்று நாயன்மார்களின் மூலத்திருமேனிகள் - அடுத்துச் சேக்கிழார்.

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

தில்லைவாழ் அந்தனர், திருநிலகண்டர், இயற்பகையார், எறிபத்தர், எனாதிநாதர், கண்ணப்பர், குங்கியக்கலயர், அமர்நீதியார், இளையான் குடிமாறர் மெய்ப்பொருளார். விறன்மின்டர், மானக்கஞ்சாறர், அரிவட்டாயர், ஆனாயர், மும்மையால் உலகாண்ட மூர்த்தி, முருகர், உருத்திரபசுபதி, திருநாளைப் போவார். திருக்குறிப்புத் தொண்டர். சண்டேசுவரர், திருநாவுகரசர், குலச்சிறையார், பெருமிழலைக் குறும்பர், காரைக்கால் அம்மையார், அப்பூதியடிகள், திருவேற்காட்டூர் மன்னன், மூர்க்கநாயனார், சோமாசிமாறர், சாக்கியர், சிறப்புலியார். சிறுத்தொண்டர் கழறிற்றறிவார், சேரமான் பெருமாள், வேற்கூற்றர் களந்தைக்கோன், பொய்யடிமையில்லாத புலவர், கரூவூர்த்துஞ்சிய புகழ்சோழர், நரசிங்க முனையரையர், நாகை அதிபத்தர், கலிக்கம்பர், கலயர், தென்விரிஞ்சை சக்தி, ஐயடிகள் காடவர்கோன், கணம்புல்ல நமி, கடவூர்காரி, நெல்வேலி வென்ற நெடுமாறான். மயிலைவாயிலார், நீடுர் அதிபர் முனையடுவார், காடவர் கோன் கழற்சிங்கர், இருக்கு வேளூர் மன்னன் இடங்கழி, தஞ்சை மன்னன் செருத்துணை, கோட்புலி, பத்தராய்ப் பணிவார்கள், திருவாரூர்ப் பிறந்தார்கள், முப்போதும் திருமேனி நீண்டுவார், முழுநீறு மூசிய முனிவர், அப்பாலும் அடிசார்ந்தார், பூசலார், மங்கையர்க்கரசியார், நேசனார், செங்கணக்கோனார், திருநீலகண்ட யாழ்ப்பாணர், சடையனார், இசைஞானியார்.

வெள்ளைக்கம்பர் சந்நிதி இப்பகுதியின் மத்தியில் மூலஸ்தானத்தின் பக்கத்தில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இவர் பிரம்மனால் பூசிக்கப்பட்டவர்.

பிராகாரத்தின் தெற்கு, மேற்குப் பகுதியில் தெற்கு - வடக்கு வரிசையில்

முதற்கண் சந்தானகுரவர் நால்வர்களான மெய்கண்ட சிவாசாரியார், அருள்நந்தி சிவாசாரியார், மறைஞான சம்பந்த உமாபதி சிவாசாரியர், உருவச் சிலைகள் அமைந்துள்ளன. அடுத்து காசி விஸ்வநாதர் சிவலிங்கம், சந்தான கணபதி, சௌபாக்கிய கணபதி, சக்தி கணபதி, ஒரு வரிசையில் மொத்தம் நூற்றெட்டு இலிங்க்ங்களைக் கொண்ட அஷ்டோத்ர சிவலிங்கம்.

பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் மேற்கு - கிழக்கு வரிசையில் மார்க்கண்டேசுவரர் சிவலிங்கம், மத்தளமாதவேஸ்வரர் சிவலிங்கம், திருமால் பூசித்த சுயம்புலிங்கம், கள்ளக்கம்பர். அடுத்துள்ளவை அறுபத்து மூன்று நாயன்மாரின் உற்சவ மூர்த்தங்கள். திருமஞ்சனக் கிணறு, சண்டேசுவரர் சந்நிதி. இப்பகுதியின் மத்தியில் மூலஸ்தானத்திற்கு அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

பிராகத்தின் கிழக்குப் பகுதியின் வடபால் நல்லக் கம்பர், சூரிய மூர்த்தி, நிலாத்துண்டப் பெருமாள் உள்ளார். நல்லக் கம்பர் உருத்திரரால் பூசிக்கப்பட்டவர்.

"எல்லையில் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே"

- சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை.

திருமஞ்சனக் கிணற்றுக்கு வடக்குப் பிராகாரச் சுவரில் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் முனையைதரையர் கள்ளக்கம்பர் திருமுன்பு, எரியும், திருநந்தா விளக்கு ஒன்றுக்குப் பசு முப்பத்திரண்டு, ரிஷபத்துக்கும் ஸ்ரீ பண்டாரத்துக்கும் பணம் நூறும் கொடுக்கப்பட்ட செய்தி வரைப்பட்டுள்ளது.

சூரிய மூர்த்தி கலையழகுடன் நின்ற கோலத்திலுள்ளார். நிலாத் துண்டப் பெருமால் சந்நிதியில் இரண்டு திருமால் திருமேனிகள் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றன. இவற்றுள் ஒன்று சுதையாவானது. அவைகளில் தலையின் மீது சப்த நாகத்தின் படம் விரிந்திருக்கும் அமைப்புள்ளது. இப்பெருமான் சந்நிதி வைணவர்களின் நூற்றியெட்டு திவ்விய தேசங்களுள் ஒன்று. காஞ்சியில் உள்ள பதினான்கு திவ்விய தேசங்களில் இதுவும் ஒன்று. திருப்பாற் கடலில் அமிர்தம் கடைந்தெருத்த காலத்தில் மஹாவிஷ்ணுவுக்கு ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஏசான பாகத்தில் தியானஞ் செய்து சிவனுடைய சிரசிலிருக்கும் சந்திர ஒளி விஷ்ணுமேல் பட்டு வெப்பம் நீங்கிச் சாந்தி அடைந்ததால் நிலாதுண்டப் பெருமான் என்றும் பெயர் பெற்றார்.

பிறைதுண்டவார் சடையாய், பெருங்காஞ்சி எம்பிஞ்ஞகனே என்று அப்பர் பாடினார். சிவன் சடையில் அணிந்துள்ள பிறைத் துண்டத்தில் தண்ணொளி பட்டுத் திருமாலின் வெப்பம் தீர்ந்ததால் இப்பெருமானை நிலாத் திங்கள் துண்டத்தாய் என்று திருமங்கையாழ்வார் போற்றினார்.

துவார பாலகர் இருவர் கர்ப்பக் கிருகத்தினுள் நுழையும் வாயிலின் இருபக்கங்களிலும் ஒற்றைக் கால் உயர்த்தி நின்று காவல் காக்கின்றனர்.

இதே போல், அவர்கள் மூன்றாம் பிராகாரத்திலிருந்து ஆலயத்திற்குள் நுழையும் வாயிலின் முகப்பில் நின்று காவல் காக்கின்றனர்.

சிவபெருமான் திரிபுரத்தை அழித்து அவைகளைச் செலுத்திய அசுரர்களில் தாரகாட்சனையும், வித்யுன்மாலியையும் துவார பாலகர்களாகவும் கமலாட்சனை முழவு வாசிப்பலனாகவும் இருக்கும்படியும் அருள் புரிந்தார். இதனை,

முவெயில் செற்றஞான்றுய்ந்த
மூவரில் இருவர் நின் திருக்கோயிலின்
வாயில் காவலாளர் என்று எளிய பிள்ளை

எனச் சுந்தரர் திருப்புன்கூரில் பாடுகிறார்.

இரண்டாம் பிராகாரம்

இப்பிராகாரம் முதற் பிராகாரத்தையும் மாவடியையும் ஓட்டி அமைந்திருப்பது திருக்கோயிலிக்கு அழகான தனித் தன்மையை நல்குகிறது. இவ்வமைப்பு போல் மற்றக் கோயிலில் காண்பது அரிது. அதைப் போலவே மாவடியில் உள்சுற்றும் பிறவிடங்களில் காண்பரிது.

"பண்ணில் ஓதினில் இன்சுவை
பெண்ணொ டாணென்று பேசற்கரியவன்
வண்ண மில்லி வடிவுமே றாயவன்
கண்ணி லுண்மணி கச்சியே கம்பனே"

- அப்பர் திருகச்சியேகம்பம் , 5 - திருமுறை 1,8.

இம்மரத்தின் கீழ் ஏகம்பர் மாதொரு பாகராக வடிவுவேறானார்.

காமாட்சி தவமிருந்தபோது இம்மாமரத்தின் மூலத்திலலிருந்து இறைவன் வெளிப்பட்டதாகப் பெரிய புராணம் கூறும்.

இம்மாமரத்தின் வயது சுமார் 3,500 ஆண்டுகள் எனத் தாவரஇயல் வல்லுநர்களால் கணக்கிடப்பட்டுள்ளது. இம்மரத்தின் நான்கு கிளைகளில் ஒவ்வொரு கிளையிலிருந்தும் விழும் பழம் ஒவ்வொரு விதமான சுவை கொண்டது. இக்கிளைகள் நான்கு வேதங்களைக் குறிப்பனவாகக் கருதப்படுகின்றது.

இம்மாவடி சிறந்த பிரார்த்தனை செய்யும் இடமாகவும் திருமணம் செய்யும் இடமாகவும் விளங்குகிறது.

பிரளயங் காத்த பத்தினி (பிரளய கால சக்தி)

இந்த அம்பிகைக்குத் தனியாகக் கோவில் பவித்திர மண்டபத்திற்கு எதிரில் உள்ளது. இங்குள்ள அம்பிகை உலக ஒடுக்கக் காலத்தும், அழிவு வாராது காக்கும் தெய்வமாதலின் பிரளய கால சக்தி எனப் பெயர் பெற்றான் என்பர். இச்சக்தி வழிப்பட்ட இறைவரை நினைவுகொள்ளும் வகையில் கோவிலில் பிரளய நாத இலிங்கம் உள்திருச்சுற்றின் இடப்புறம் உள்ளது.

பிரளய கால சக்தி ஏழு கைகளில் ஆயதங்களை ஏந்திக்கொண்டு ஒரு கையை இடது தொடைமேல் வைத்துக் கொண்டிருக்கிறாள். நவராத்திரி நாட்களில் பிரளய கால சக்திக்குச் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் ஆராதனையும் செய்யப்படுகின்றன. மேலும் சித்திரை மாதக் கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு இளநீர் அபிஷேகம் மிகச்சிறந்த முறையில் வருடாந்திரம் செய்யப்படுகின்றது.

காஞ்சியில் வேறு எந்த கோவிலிலும் இச்சக்தி இல்லை. உமையம்மை இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கும்போது பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தை இந்த சக்தி தடுத்துக் காத்தாள் என்பர்.

பிரளயங்காத்த அம்மனைக் கடந்து வரும் திருச்சுற்றில் வலப்பக்கமாக அமைந்துள்ள சபாநாயகர் மண்டபம் கோயிலின் அழகுக்கு அழகு செய்கிறது.

இம்மண்டபத்தில் உற்சவர் சன்னதி உள்ளது. மாவடிக்குத் தென் பக்கத்தில் உள்ள சந்நிதியில் ஏலவார்குழலியின் உற்சவத் திருமேனி உள்ளது

இம்மணடபத்தின் எதிர்ப்புறத்தில் சுற்றி வலம் வரும்போது காண்பவை - மடைப்பள்ளி, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் உற்சவத் திருமேனிகள், நந்தி, வரிசையாக 53 சிவலிங்கங்கள், விநாயகர், 1-2-1992-ல் பிரதிட்டை செய்யப்பட்ட ஸ்ரீபஞ்சமுக விநாயகர், வரிசையாக 34 சிவலிங்கங்கள், ஆயிரத்தெட்டு இலிங்கங்களைக் கொண்ட ஸஹஸ்ர லிங்கம், முருகன், அடுத்து வரிசையாக 21 சிவலிங்கங்கள், திருப்பள்ளி அறை, வரிசையாக 28 லிங்கங்கள், நந்தி ஸ்ரீநடராஜர் சபை, பைரவர், ஸ்ரீ ஆறுமுகஸ்வாமி சந்நிதி. இதில் மயில்மீது ஆறுமுகங்கள் பன்னிரண்டு கரங்களுடன் ஆறுமுகன் வள்ளி தேவயானை உற்சவ திருமேனிகள் உள்ளன. அடுத்து யாகசாலையும் வாகன மண்டபமும்.

நடராஜர் சபை பிரகாரத்தில் சண்டிகேசுவருடன் தனிச் சந்நிதியாக அமைக்கப்பட்டுள்ளது. இதனுள் நடராஜர் சிவகாமி விநாயகர் திருமேனிகளும் திருமுறை நூல்களும் உள்ளன.

மூன்றாம் பிரகாரம்

இப்பிராகரத்திலிருந்து இரண்டாம் பிராகரத்திற்குள் புகும் வாயில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு துவார பாலகர்கள் வாயிலில் நின்று ஆலயத்தைக் காக்கின்றார்கள். அவர்களுக்கு மேலே சுவரில் தென்பால் கணபதி உருவமும் வடபால் மயில்மீதி ஆறுமுகர் உருவமும் அமைக்கப்பட்டுள்ளன.

துவஜஸ்தம்ப மண்டபம்

இம்மணடபத்தில் மூலவர்க்கு நேர் எதிரில் நந்தி, துவஜஸ்தம்பம் (கொடிமரம்), பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு நேராக மண்டபத்திற்கு வெளியில் ஒரு பெரிய மகாநந்தி கம்பீரமாக மூலவரை நோக்கியிருப்பது மிகவும் அழகாக உள்ளது.

கரிகாற் சோழன்

இச்சிலை துவஜஸ்தம்ப மணடபத்திலிருந்து கோவிலுக்குள் நுழையும் வாயிலின் தென் பக்கம் உள்ளது. இச்சிலையின் இடக்கால் வீங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. சுட்டெரிக்கப்பட்டு உயிதப்பி, தீப்புண்ணால் கால் கறுத்து விட்டதால் கரிகாற் பெருவளத்தான் என்ற நற்பெயர் பெற்று இமயத்தில் புலிச் சின்னம் பொறித்த சோழமன்னன் கறிசிலை என்பதில் ஐயமில்லை.

திருகச்சி மயானம் துவஜஸ்தம்த்திற்குத் தென்பக்கத்தில் அமைந்துள்ளது. இச்சந்நதியின் சுவர்களில் பண்டன் என்னும் அசுரன் வரலாறு உள்ளது. அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் தேவர்கள் மற்றும் மக்களின் வலிமையைக் கவர்ந்து துன்புறுத்தி வந்தான். திருமால், நான்முகன், தேவர்கள் வேண்டியபடி சிவபெருமான் சச்சி மயானத்தில் வேள்வி நடத்தினார். அதில் உயிரினங்களை ஆகுதியாக இட்டு அழித்தார். பின்னர், அவர் உயிரினங்களை வேள்வித் தீயில் இட்டுச் சாம்பலாக்கிய இடம் கச்சி மயானம் எனப்பட்டது. சிவபெருமான் வேள்விக்கு அமைத்த நெய்குண்டம் சிவகங்கைத் தீர்த்தமாகும்பாடி அருள்புரிந்ததாக புராணம் கூறும்.

"மைப்படிந்த கண்ணாளுந் தானுங்கச்சி
மயானத்தாள் வார்சடையான் என்னினல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருருவனல்லன்
ஓரூரனல்லன் ஒருவமனில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவளருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே"

- அப்பர் பொது வினாவிடைத் திருத்தாண்டாகம் - 10

வள்ளல் பச்சையப்ப முதலியார் துவஜஸ்தம்ப மண்டபத்தைக் கட்டி அழியாப் புகழைப் பெற்றார். அம்மண்டபத்தின் ஒரு தூணில் அவர் தம் திருவுருவத்தைக் கண்டுகளிக்கலாம். இப்பிராகரத்தை வலம்வரும்போது காண்பவை-

தெற்குப்பாகத்தில் ஒரு விமானத்தில் இலிங்காயத்தீஸ்வரர், பல்லவர், கோபுரத்தின் எதிரில் தம்பட்ட விநாயகர், விஷ்ணுவேஸ்வரர், மேற்குப் பகுதியின் வடகோடியில் அரசமரம் - வேப்பமரத்தின் அடியில் நாகலிங்கங்கள், அடுத்து வடபாகத்தில் சிவகங்கைத் தீர்த்தம், இக்குளத்தின் மேற்கில் திருக்கச்சி மயானத்தின் பின்னால் மகாநந்தி அருகில் வாலீஸ்வரர் சந்நிதி உள்ளது.

கல்யாண மண்டபம் வெட்டவெயிலில் அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர நாளில் ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படும். அப்போது, நூற்றுக்கணக்கான தம்பதிகளுக்குக் கோயிலில் கல்யாணம் நடப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

நான்காம் பிரகாரம்

இப்பிராகாரத்தில் சரபேசர் மண்டபம், நடராஜர் நந்தவனம், கம்பைத் தீர்த்தம், ஆயிரக்கால் மண்டபம் உள்ளன.

சரபேச மண்டபம்

இது கோபுரத்திற்கு நேராக உள்ளே உள்ளது. இங்கு நவராத்திரி நாட்களில் தேவி அலங்காரத்தோடு எழுந்தருளி அடியவர்க்குக் காட்சி தருவாள். திருவிழாக்காலங்களில் சுவாமி இம்மண்டபத்திற்கு வந்து வாகனம் ஏறி அலங்காரமாகத் திருவீதியுலா புறப்படும் காட்சி பார்க்கத்தக்கது.

ஆயிரக்கால் மண்டபம்

இம்மண்டபம் பல்லவர் கோபுரம் முன்பு கவினுற அமைந்துள்ளது. இதில் இப்போது 516 தூண்கள் இருக்கின்றன. இதில் விகடச் சக்கர விநாயகரும் முருகனும் உள்ளனர். விகடசக்கர விநாயகரே தலவிநாயகர் ஆவார்.

ஐந்தாம் பிரகாரம்

இப்பிராகரம் கோயிலின் வெளிப்புற மதிற் சுவற்றைச் சுற்றி நாற்புறமும் உள்ள வீதிகளைக் கொண்டது.

இராஜகோபுரம்

இதன் உயரம் 192 அடி . இது ஒன்பது நிலைகளைக் கொண்டது. இதன் முதல் தளத்தின் மேலுள்ள வெளியிடத்தில் மேற்புறத்தில் கிருஷ்ணதேவாராயர் தம் அரசியல் அலுவலர்களுடன் இருப்பது போன்ற உருவங்கள் உள்ளன.

இராஜகோபுரத்தின் வாயிலின் கிழக்குப் பக்கத்து சந்நிதியில் விநாயகரும் மேற்குப் பக்கத்துச் சந்நிதியில் மயில்வாகனனும் வீற்றிருக்கிறார்கள்.

ஏகாம்பரநாதர் சந்நிதி வீதியில், கோயிலின் முன்பு நான்குகால் மண்டபம், பதினாறுகால் மண்டபம் அமைந்து இராஜகோபுஅரத்தின் அழகுக்கு அழகு செய்கின்றன.

காஞ்சியின் சிறப்பு

காபிரமன், அஞ்சித்தல் - பூசித்தல், பிரமன் தவமிருந்த இடமாதலால் காஞ்சிபுரம் என்ற பெயர் உண்டானது என்பர். இங்குகு உமை ஏகாம்பரேஸ்வரரைப் பூசித்தாள்.

காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி என்னும் மூன்று சக்தி பீடங்களில் ஒன்று. காஞ்சி. பஞ்சபூதத்தலங்களில் பிருதிவித்தலம். காஞ்சியில் 108 சிவாலயங்களும் 18 விஷ்ணுவாலயங்களும் உள்ளன,.

ஏகாம்பரநாதர் எல்லைக்குள் இருக்கும் கோயில்கள்

சிவாலயங்கள்

காயரோகணேஸ்வரர், கரஹரேஸ்வரர், அதேக தங்காவதேஸ்வரர், கைலாசநாதர், காசி விஸ்வநாதர், திருக்கச்சி மேற்றளி கச்சபே|ஸ்வரர், ஓனகாந்தீஸ்வரர், கச்சி மயானேஸ்வரர்.

விஷ்ணுவாலயங்கள்

நிலாத்துண்டப் பெருமான், பாண்டவதூதர், சந்திரகிரீவப் பெருமான், சுவேதப் பெருமான்.

சக்தி ஆலயங்கள்

பிரள பந்தினி - கம்பா நதிப்பெருக்கை அடக்கியவள், சம்பத்கௌரீஸ்வரி - கஜாகரனைக் கொன்றவள், இரேணுகாம்புஜவல்லி - சம்பு ஏதியர்க்குக் கண் கொடுத்தவள், வீரவரேஸ்வரியவீரபத்திரரின் கோபத்தைத் தணித்தவள்,. சம்பத் கோரீஸ்வரிய அரசு காத்த அம்மன் ஆவாள்.

தீர்த்தங்கள்

சிவகங்கைத் தீர்த்தம், கம்பைத் தீர்த்தம், கரஹரத் தீர்த்தம், பாண்டவர தீர்த்தம், கங்கை கொண்டான் மண்டபம் அருகிலுள்ள மங்கள தீர்த்தம், கரஹா (ஜ்வரஹா) தீர்த்தமே இன்று பெயர் மாறி (வெப்பெறி குளம்) உப்பேரி குளம் என்று விளங்குகிறது.

ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டு தரும் செய்திகள்

விக்ரம சோழன் - (1122 - 1135) கலிங்க மீறிய சுடாமலை நடாத்தி வலம் வந்தான். (எஸ்.ஜ்.இ.நெ 455)

மூன்றாம் குலோத்துங்க சோழன் - (1178-1218) மதுரையும் பாண்டியன் முடித்தலையும் கொண்டுள்ளான் (எஸ்.ஜ்.இ.நெ 444, 452, 456) முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் சி.பி.1238-ல் பாண்டிய நாட்டின் அறியணை ஏறினான். இவன் உறையூர்க் கூற்றத்திலிருந்து வருதாவனம் என்னும் அரண்மனையிலிருந்து தன் அரியணைக்கு கச்சிக்கு வாசன் என்று பெயரிட்டிருந்தான். இதனை, கொங்கிரண்டும் மலை மண்டலமும் குளமும் சோழ மண்டலமும் நடுவில் மண்டலமும் செயங்கொண்ட சோழ மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ குலசேகரத் தேவர் என்று இக்கோவில் கல்வெட்டொன்று கூறுகிறது. (எஸ்.ஐ.இ.1.1 நெ 453) இக்கல்வெட்டினால் திருவேகம்பன் ஞாழி என்ற முகத்தலளவை இருந்ததும், கள்ளக்கம்பர் முன்பு புவனகவீரன் என்றபட்டம் உண்டு.

இவன் தன் பெயரில் - புவனக சந்தி! பூஜைக்கும் தான் பிறந்த நாள்தோறும் விசேஷ பூஜைக்குமாகப் பாண்டி மண்டலத்து வீரநாராயண வளநாட்டுச் சமரகோலாகல நல்லூரை ஏகாம்பரர்க்கும் புவனகவீர நல்லூரை நாச்சியார் காமாட்சிக்கும் தேவதான். இறையிலியாக அறிவித்தான். (எஸ்.ஜ்.இ.நெ 458) இவனுடைய அதிகாரி வாணாதி கலிங்கராயன் இவன் பெயரில் குலசேகர சந்தி பூஜை செய்யும்போது வேதம் ஓதுவதற்காக நீர் மேலூர் தன் அரசன் பெயரால் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்னும் அக்ரகாரத்தை 110 பிராமணர்களுக்குத் தேவதானம் அளித்தான் (எஸ்.ஐ.இ.1.1 நெ 439)

சோழ மன்னர்களும், விஜயநகர மன்னர்களும் மற்றவரும் ஏகம்பர்க்குப் பொருள் தந்ததைக் கல்வெட்டுக்குள் தெரிவிக்கின்றன.

வழிபாட்டுக் காலங்களும் ,முறைகளும்.

மக்கள் நலன் குறித்துக் கோவில்களில் வெவ்வேறு காலங்களில் பூஜைகள் நிகழ்த்தப் பெறுகின்றன. இக்கோயிலில் நாள்தோறும் ஆறு கால வழிபாடுகள் நடக்கின்றன. அவை நித்திய பூஜை எனப்படும். இவை பின்வரும் காலமுறைப்படி நடைபெறுகின்றன.

1. விஷயற்காலம் (உஷத் காலம்) காலை 6-7 மணி
2. காலசந்தி (காலை) 8-8.30 மணி
3. உச்சிகாலம் (நன்பகல்) 11-12 மணி
4. மாலைக்காலம் (பிரதோஷகாலம்) 5-5.30 மணி
5. சாயங்காலம் (சாயரட்சை) 6-7மணி
6. நள்ளிரவு (அர்த்தசாமம்) இரவு 8.45-9 மணி

திருக்கோயிலில் நிலாத்துண்டப் பெருமாளுக்கு எதிரில் உள்ள கிணற்று நீரே திருமஞ்சன (அபிஷேக) நீராகப் பயன்படுகிறது.

திரயோதசி நாளில் வரும் பிரதோஷ பூஜையின்போது பெருமாள் இடப வாகனத்தில் அலங்காரத்துடன் உள் சுற்றிலும், வெளிசுற்றிலும் பவனி வருகிறார். இத்திருக்கோயிலில் நாள்தோறும் நடக்கும் பூஜைகளோடு நைமித்திய காமிக பூஜைகளும் நடைபெறுகின்றன.

விடியற்கால பூஜை

இப்பபூஜை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் நடக்கும். அக்காலத்தில் ஏகாம்பரநாதர் பள்ளியறையிலிருந்து புறப்பட்டு மூலத்தானத்திற்கு வருவார். குருக்கள் ஒளி வழிபாடு செய்வார். அவ்வமயம் திருப்பள்ளியெழுச்சியைக் கோயிலில் ஓதுவார் பாடுவார்.

காலசந்தி புஜை

இக்காலத்தில் பெருமானுக்கு அக்கினி காரியம் செய்து பல்லக்கில் எழுந்தருளச் செய்வார்கள். பெருமான் பலிபீடம் வரையில் சென்று அக்கினி காரிய மேடையில் வீற்றிருப்பார். பின்னர் சுவாமிக்கு அபிஷேகத்தையும், வழிபாட்டையும் செய்வர்.

உச்சிக்கால பூஜை

இப்பூஜையில் நாள்தோறும் பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

மாலைக்கால பூஜை

இப்பூஜையில் பெருமானுக்கு அபிஷேகமும் வழிபடும் நடந்தபிறகு பஞ்சப்புராணப் பாடல்களை ஓதுவார் பாடுவார்.

சாயங்கால பூஜை

இக்காலத்தில் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

இரவு பூஜை (அர்த்த சாம வழிபாடு)

இப்பூஜை இரவு எட்டு மணி முதல் எட்டே முக்கால் வரை நடக்கும். பெருமானுக்கு வழிபாடு நடந்தபிறகு பள்ளியரைக்குப் பெருமானைப் பல்லக்கில் எடுத்துச் செல்வர். இச்சமயத்தில் திருவாசகத்தில் உள்ள பொன்னூசல் பாடல்கள் பாடப்படும்.

மேற்கூறிய பூஜைகளோடு ஏகாம்பர நாதருக்குப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மகா பிரதோஷ காலம் பூஜை செய்யப்படுகிறது. அன்று பெருமான் இடப வாகனத்தில் அலங்காரத்துடன் உள் திருச்சுற்றிலும், வெளிசுற்றிலும் பவனி வருகிறார். பூஜை நடக்கும் காலங்களில் திருக்கோயிலில் பெரியமணி அடிக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் நாள்தோறும் நடக்கும் பூஜைகளோடு நைமித்திய காமிக பூஜைகளும் நடைபெறுகின்றன. இப்பூஜைகளைச் சிறப்புடன் செய்வதற்குரியவர்கள் வெவ்வேறு பெயர்களால் அழைப்பர்.

கோயிலில் பூஜைகளைச் செய்பவரை அர்ச்சகர் என்றும், பூஜைக்கு உரியதான மந்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றைச் சொல்பவரை வாசகர் என்றும், பூஜை காலங்களில் இறைவனுக்குப் புஷ்பங்களாலும் அணிகலங்களாலும், அலங்காரம் செய்பவரை அலங்கிருதர் என்றும், பூஜைக்குரியக் கருவிகளைக் கொடுத்த உதவி செய்பவரைச் சாதகர் என்றும் கூறுவர்.

மேற்கூறிய வழிபாடுகள் தவிர இத்திருக்கோயிலில் அவ்வப்போது சிறப்பு திருமுழுக்கு வழிபாடுகளும் நடைபெறுகின்றன. சிவபெருமானுக்கு திங்கட்கிழமைகளில் திருமுழுக்குச் செய்வது மிகவும் சிறந்ததாகும். திருமுழுக்குப் பொருள்களின் வகைகளையும், அவற்றைச் செய்தலில் ஏற்படும் நன்மைகளையும், பயன்களையும் பின்வருவனவற்றால் அறியலாம்.

அபிஷகப் பொருள்களும்,பெறும் நன்மைகளும்

1. பழவகைகளால் ஜன வசீகரத்தையும்
2. பஞ்சாமிர்தத்தினால் தீர்க்காயுளையும்
3. பால் அபிஷேகத்தினால் சாந்த குணத்தையும்
4. தயிர் அபிஷேகத்தினால் திடகாத்திரத்தையும்
5. தேனால் இனிய சாரீரத்தையும்
6. நெல்லினால் சுகவாழ்வினையும்
7. நீரினால் சாந்தியையும்
8. நெய்யினால் மோட்சத்தையும்
9. அன்ன அபிஷேகத்தினால் ஆயுள் ஆரோக்கியத்தையும்
10. பஞ்ச கவ்வியத்தினால் ஆன்ம சுத்தியையும்
11. மஞ்சன் காப்பினால் இராச வசியத்தையும்
12. கரும்பு கச்சரையினால் சாத்திரத் தேர்ச்சியையும்
13. இளநீரினால் நன்மக்கட் பேற்றினையும்
14. விபூதியினால் ஞானத்தையும்.
15. பன்னீரினால் புகழையும்
16. பட்டு பீதாம்பரத்தினால் சம்பாவனைகளையும்
17. சந்தனத்தினால் கவர்க்க போகத்தையும்
18. புஷ்பத்தினால் மகிழ்ச்சியினையும்
19. கற்பூரத்தினால் அத்வைத முத்தியையும்
20. குங்குமத்தினால் மங்கலத்தையும்
21. கஸ்தூரி அபிஷேகத்தினால் வெற்றியையும் பெறலாம்.

ஆகமங்களை உணர்ந்து அதன்படி நாளும் தவறாது நைமித்திய கிரியைகளைச் செய்பவர் ஆசாரியர் ஆவார். கோவிலில் உள்ள ஆசாரியர் அர்ச்சகர், அலங்கிருதர், வாசகர், சாதகர் ஆகிய ஐவரையும் பஞ்சாசாரியார் என அழைப்பர்.

நைமித்திய பூஜை

நைமித்தியம் என்பது ஒரு காரியத்தின் நிமித்தமாகச் செய்யும் பூஜை ஆகும். சான்றாகக் கிரணகாலம். தீட்டு முதலிய காலங்களில் அவற்றின் பொருட்டு செய்யும் பூஜைகளைக் கூறலாம்.

காமிய பூஜை

காமியம் என்பது விருப்பம். ஒரு விருப்பத்தின் பொருட்டு பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் வழிபாடு.

ஏகாம்பரநாதர் கோவிலில் நித்திய, நைமித்திய காமிய பூஜைகளைத் தவறாமல் பண்டைக்கால முதல் பதினெட்டு பரம்பரையினர்கள் செய்து வருகின்றனர்.

இக்கோயிலில் வழிப்பட்டவர்களுள் உமையம்மை, உருத்திரர், திருமால், பிரமன் ஆகிய தெய்வங்களும், வரலி போன்ற மன்னர்களும் சமயகுரவர்களான நால்வரும், கச்சியப்ப சிவாச்சாரியர், பட்டினத்தடிகள், இரட்டைப் புலவர்கள் போன்ற அடியார்களும் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

வழிபட்டோர் வழிபாடுகள் பற்றிய குறிப்புகள்

இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள திருவேகம்பப் பெருமானை உரித்திரர் வழிபட்டார் என்பதை அறியலாகதவர் நேரிய எண்ணத்துடன் வழிபட்டமையால் ஏகாம்பரநாதர் நல்ல கம்பர் எனப்பட்டார். நல்ல கம்பரை வழிபடுவோர் என்றும், எக்காலத்தும் மேனிலை அடைவர். நல்லகம்பரின் சிறப்பைச் சிவஞான முனிவர்.

"உருத்திரன் நலத்தரும் ஒருமை பூண்டுயர்
கருத்தோடும் வழபடு நல்லகம்பனை
அருத்தியின் வழிபடும் அடியர் என்பிரான்
மருத்தபூத் திருவடிக் கலப்பின் மன்னுவார்."

எனக் காஞ்சிப் புராணத்தில் பாடியுள்ளார்.

பாற்கடல் துயின்றோனும் பரமனை வழிபட்டான். அறிதுயில் கொண்ட ஆயர் தம் கொழுந்து ஏகாம்பரநாதரை மயக்குறுத்தும் தன்மைகளோடு வழிபட்டமையால் இவர் கள்ளக்கம்பர் எனப் பெயர் பெற்றார் என்பர். கள்ளக்கம்பரை வணாங்கும் சிறப்புப் பெற்றவர். அச்சத்துக்குக் காரணமாகிய தீய செயல்களில் மயக்குறார் என்பதனைச் சிவஞானமுனிவர்.

"மருள்புரி கருத்தினால் மாயன் ஏத்தலின்
கருதும் அப்பெரிய கள்ளக் கம்பனை
திருவடி வழிபடப் பெற்ற சீரியோர்
உருகெழு கொடுவினை மைய லுட்படார்."

என்று கூறியுள்ள காஞ்சிப் புராண வாக்கினால் அறியலாம்.

பிறவித் துன்பம் நீக்கிக் காப்பார் வெள்ளக்கம்பர்.

பிரமன் திருவேகம்ப நாதரை கள்ளமில்லாத தூய்மையான உள்ளத்தோடு வணங்கிய காரணத்தால் ஏகாம்பரநாதர் வெள்ளக்கம்பர் என்ப் பெயர் பெற்றார். இவரை வழிபடுவோர் உடற்சுமை நீங்கித் தூயவராவர். பிறவிப் பெருங்கடல் நீந்துவார். இதனை

"வாலிய சிந்தையால் மலர்ப்பொ குட்டணை
மேலவன் வழிபடும் வெள்ளக் கம்பனை
ஆலிய அன்பினால் அருச்சித் தேத்துவ
தோலுடற் பொறைகழீஇத் தூய ராகுவார்."

எனக் காஞ்சிப் புராணம் சாற்றும்.

வாலி வழிபட்டான்

தேவேந்திரன் மகனான வாலி தன்னைப் போரில் யாவர் எதிர்ப்பினும் அவரது வலியில் தனக்குப் பாதியும். தோல்வி இல்லாத வெற்றியும் வர வேண்டுமென்று திருவேகம்பநாதரை வழிபட்டனன். அவ்வாறு வழிபட்டதால் வாலி தன்னை எதிர்த்தவர் வலியில் செம்பாதி பெற்றான். இவ்வாலீஸ்வரர் கோயில், இத்திருக் கோவிலில் கச்சி மயானத்திற்குக் கிழக்கே உள்ளது.

சித்தர்கள் வழிபட்டனர்

சித்தர்கள் வழிபடத் தோன்றிய வாயு லிங்கமே வாலீசமாகும். இந்த லிங்கத்தையே வாலி பூசித்து வலிமையும் வானரத் தலைமையையும் பெற்றான்.

சமயக்குரவர் நால்வரின் வழிபாடு

திருஞான சம்பந்தர் ஏகாம்பரநாதர் பெருமையினைச் சிறப்பாகப் பாடியுள்ளார். காஞ்சியில் உள்ள ஏகாம்பரநாதரை வணங்கினால் நம்முடைய துன்பங்கள் நீங்கும். திருஞான சம்பந்தரது உள்ளம் காஞ்சியிலுள்ள ஏகாம்பரநாதர் மேல் மிகுந்த ஏடுபாடு உடையதாக இருந்தது என்பதனை

ஏகாம்பந்தொழ இடர் கெடுமே - 33
ஏகம்பந்தொழ வல்வினை மாய்ந்திடும் - 34
ஏகம்பத்தானை யல்ல துள்காதென் உள்ளமே - 35

என்றெல்லாம் அவர் தமது தேவாரத்தில் பாடி உள்ளதால் அறியலாம். திருநாவுக்கரசர் ஏகாம்பரநாதரை எப்போதும் மனத்தில் வைத்திருப்பதாகவும், கருவுற்ற நாள் முதலாகத் தன்மனம் அப்பெருமானைக் காண உருகிற்றென்றும் பாடியுள்ளார் - 36.

சுந்தரமூர்த்தி நாயனார் தம்பிழையைப் பொறுத்துக் கண்ணொனி தருமாறு வேண்டினார். சுந்தரர் தம் இருகண் பார்வையை இழந்து வருந்தும் வருத்தத்தினைக் காணப் பொறுக்காத ஏகாம்பரநாதர் இடக்கண் பார்வையைச் சுந்தரர்க்குக் கிடைக்குமாறு அருள்செய்து தமது கோலமும் காட்டினார். சுந்தரர் பக்திப் பெருக்கால்

"ஆலந்தாள் உகந்து அமுதுசெய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலம்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை யுளானை
ஏலவார் குழலான் உமைதங்கை
என்றும் ஏந்தி வழிபடப்பெற்ற
கால காலனைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே"

என்று பாடித்தொழுதார்.

மாணிக்கவாசகர் தன் திருவாசகத்தின் "தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பன் செம்பொற் கோயில்" என்று கச்சியேகம்பமேய பிரானைப் போற்றுகின்றார்.

மற்றையோர் வழிபாடு

இரட்டைப் புலவர்கள் மற்றும் பிற்காலப் புலவர்களாலும் பக்திப் பரவசத்தோடு ஏந்தி வழிபடப் பெற்ற பெருமைக்குரிய தலம் திருவேகம்பமாகும்.

மன்னர்களும் மக்களும் கொடை வழங்கினர்

யாவராலும் வழிபடப் பெற்ற திருவேகம்பன் செம்பொற் கோயிலுக்குச் சிறப்பு வழிபாடு நாள் வழிபாடுகள் செய்ய மன்னர்களும் மக்களும் பெருநிதியை பக்தியோடு கொடுத்தனர். நிலங்களும் கால்நடைகளும் தானமாக வழங்கப்பட்டன. நந்தா விளக்கினுக்காகவும், நெய்க்காகவும் இவை வழங்கப்பட்டன என்பதைக் கல்வெட்டுகள் பகர்கின்றன.

கி.பி.1155-ல் இரண்டாம் இராசராசன் ஆட்சியில் விஷ்ணு தேவன் அளித்த தர்மம், கி.பி.1160-ல் இரண்டாம் இராசராசன் 15-ம் ஆட்சி ஆண்டில் செய்யப்பட்ட தர்மங்க்ள். அதேபோல இம்மன்னன் காலத்திலேயே பத்தொன்பதாம் ஆட்சியாண்டில் ஏகாம்பரநாதர் கோயிலில் நந்தா விளக்கொன்று எரிய நாள் ஒன்றிற்கு ஒரு உஅழக்கு நெய் அளிக்க, கால்நடைகளான முப்பத்திரண்டு பசுக்களையும்,எருதையும் புவனாதி கங்கன் என்பவன் தானம் அளித்துள்ளமை பற்றிய குறிப்புகள் முதலியவைகளைக் கல்வெட்டுச் செய்திகளில் காணலாம்.

இது தவிர கி.பி.1192ல் இரண்டாம் இராசராசன் இருபத்தேழாம் ஆட்சியாண்டில் காமி நாயக்கர் என்பவர். இக்கோயிலுக்கு நந்தா விளக்கென்று எரிப்பதற்காக நாளொன்றுக்கு ஒரு உழக்கு நெய்யை அளிப்பதற்குப் பசுவும், சின்ன பசுவும், காளை ஒன்றும் தானமாகக் கொடுத்தார். அத்துடன் தராக் குத்துவிளக்கொன்றையும் அளித்ததாகத் தெரிய வருகிறது.

மூன்றாம் குலோத்துங்க மன்னனுடைய 27ம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுடொன்றும் அந்நாட்டில் வாழ்ந்த குவளாலபுர பரமேகவரன் கங்குல உத்பச குலத்தில் தோன்றியவனான சீயகங்கன் அமராபாணன் என்பவனும் நந்தா விளக்கு ஒன்று எரிவதற்காக முப்பத்திரண்டு பசுக்களையும் ஒரு எருதையும் தானமனித்துள்ளமையைக் கூறுகின்றது.

இதையடுத்து கி.பி. 1265-ஆம் ஆண்டில் விசயங்கண்ட கோபால தேவர் என்பவர் இக்கோயிலுக்கு திருநந்தா விளக்கு ஒன்று எரிவதற்காகவும், ஒரு நாழி தயிர் அமுதுக்காகவும் (தயிர் சாதம்) பத்து பாற்பசுக்களையும் பத்து சின்னப் பசுக்களையும் பண்ணிரண்டு பொலிமுறை நாகுகளையும், ஒரு எருதையும் தானமளித்துள்ள்ளார்.

கி.பி. 1269 ஆம் ஆண்டு பவனேக வீரன் என்ற மாகாணத் தலைவன். தன் பெயரால் கோயிலில் சந்தி பூஜை ஒன்றுக்கும் ஒவ்வொரு மாதமும் தான் பிறந்த நாளில் விசேட பூஜை ஒன்றுக்கும் தானமிட்டுள்ளான். சிலவூர்களைக் கீழ்க்காணும் பொருள்கள் வாங்குவதற்காக மாகாணத் தலைவன்தான்மிட்டதாகக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றிருக்கிறது. அப்பொருள்களாவன;

அமுதுபடி, கறியமுது, இலையமுது, அடைக்காயமுது, திருப்பரிவட்டம், திருமாலை, திருவிளக்கு, கடைமைவரி, காணிக்கை, விநியோகம், பஞ்ச, பீலி, செக்கின்ற, தறியிறை, தட்கொலி, தட்டளிப்பாட்டம், பொன்வரி, அச்சுக் காரிய ஆராய்ச்சி முதலியன.

இக்கல்வெட்டுக்களிலிருந்து கோயிலுக்குப் பசு, சின்னப்பசு, எருது முதலியவற்றைக் கொடுத்து அவற்றிலிருந்து கோயிலுக்கு வேண்டிய பால், தயிர், நெய் அளித்த முறைமையைக் காண முடிகிறாது. மேலும், கால்நடைகளை நந்தா விளக்கெரிப்பதற்காக அளித்ததுடன், ஊர்களையும் தானமாக அளித்துள்ளார்கள் என்பதனை அறிகிறோம்.

மேலும் விசயநகர மன்னரான வீரகம்பண்ண உடையார் என்பவர் கி.பி.1366-ஆம் ஆண்டில் எயிற்கோட்டத்தைச் சார்ந்த கறை குலைகயகம் என்ற வரியில்லா ஊர் ஒன்றினைக் கடவுளார் திருவேகம்ப முடையார்க்கும், திருக்காமக் கோட்ட நாச்சியார்க்கும் ஓடும் நீரில் தவம் செய்யும் தேவிக்கும் (ஏலவார்குழலி) நந்தா விளக்கு எரிக்கவும் பூமாலை சேர்க்கவும் தானமளித்துள்ளார் என்பதனைக் கல்வெட்டு வாயிலாக அறிய இயலுகிறது.

ஊர்களைத் தானமாகக் கொடுத்ததுடன் காசுகளையும் இவ்வாறு நந்தா விளக்கெரிப்பதற்காக மக்களும் மன்னரும் தானமனித்துள்ளனர். இதற்குச் சான்றினைக் கி.பி.1268 முதல் 1308 வரை ஆட்சி செய்த குலசேகர தேவர் தனது 15-வது ஆட்சி ஆண்டுக் காலத்தில் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு 200 பணம் அப்பத்திற்கும் (பிரசாதம்) 100 பணம் நந்தா விளக்கிற்க்கும் தானமனித்துள்ள செய்தியில் இருந்து காணமுடிகிறது.

இவ்வாறு நந்தா விளக்கிற்குத் தானமளிக்கும் போது அவை சந்திர, சூரியர் நிலவும் வரை நிலைபெற்று நடைபெற வேண்டுமென்றும், இவ்வாறு அடைபெறுவதற்குப் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்கள் தம் பொறுப்புலிருந்து தவறினாலோ, அனறேல் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இடையூறு ஏதேனும் வாராது விளைவித்தாலோ அவர்களுக்கான தண்டனையும் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளன.

குறிப்பாக இவர்கள் கங்கையிலும், குமரியிலும் செய்த பாவத்தை ஒத்த பாவத்தைச் செய்தவர்கள் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இதைத் தவிர கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அச்சுதப்ப நாயக்கர், திருமலை கிளியப்பன், மல்லப்பன் ஆகிய மூவரும் கோயிலில் வழிபாட்டிற்கு வேண்டிய வாசனைத் திரவியங்களான கற்பூரம், புனுகு சட்டம், பன்னீர், குங்குமபூ, சாம்பிராணி, சல்லப்பட்டு ஆகியவற்றைத் தானமனித்துள்ளனர் என்றும் அறியமுடிகிறாது.

வழிபாடு, அவற்றிற்கான நிதிக்கொடை முதலியவற்றைக் கண்ட நாம் அடுத்து இக்கோயிலில் தினமும் விழாக்கள் சிற்பங்கள் முதலியவை பற்றி நோக்குவோம்.

கோவிலில் சிறப்பான சிற்பங்கள்

திருக்கோயிலின் நவக்கிரகத்தை வணங்கி உள்ளவாயிலுக்கு அருகில் இருக்கும் படிகளில் இறங்கும்போது ஒரு தூணில் நரசிம்மம் இரணியனைப் பிளக்கும் சிற்பமும், எதிர்த் தூணில் பிட்சாடனர் சிற்பமும் சிறப்பாகக் காணப்படுகின்றன.

கோவிலில் வாகன மண்டபத்தில் முதல் தூணில் இறைவன் தியான நிலையில் அமர்ந்து இருக்க, அம்பிகை பக்கத்தில் நின்று இறைவனின் வலக்கண்ணைத் தன் இடக்கையால் மூடுகின்ற சிற்பம் செதுகப்பட்டுள்ளது. இதன் கீழ் நந்தி முனிவர்களின் உருவங்கள் உள்ளன. இதுவும் குறிப்பிடதக்க சிறப்புடையது.

கோவிலில் உள்திருச்சுற்றில் உலகுக்கு ஒளியைத் தரும் சூரியபகவானின் திருமேனி இங்கு அழகுடன் விளாங்குகிறது. உள் திருச்சுற்றில் இலிங்கங்களும் அவற்றும் ஒரே கல்லில் ஆயிரத்தெட்டு இலிங்கங்கள் அமைந்திருப்பதும் வியக்கத்தக்கது.

கோவிலில் இராசகோபுரத்திற்கு எதிரில் உள்ள பதினாறுகால் மண்டபத்திலுள்ள தூண்களில் உள்ள இராவணன். பத்துத் தலைகளுடனிருப்பதையும், திருமால் ஆமை அவதாரத்தில் சிவலிங்க பூஜை செய்வதையும் மார்கண்டேயர் தம் இறுதிக் காலத்தில் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள முயலுதலையும், உமையம்மை சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ளுதலையும், கண்ணப்பர் தம் கண்ணைப் பெயர்த்துச் சிவலிங்கத்திற்கு வைக்க இருப்பதையும் காட்டும் சிற்பங்கள் அழகானவை.

இக்கோவிலில் நான்கு கால் மண்டபத்தில் விகட சங்கர விநாயகர் சக்கரத்தோடு இருப்பதையும், சிவபிரான் முயல்களைக் காலால் மிதித்தலையும், முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்துள்ள சிற்பங்களையும் காணலாம்.

ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள தூண்களில் சிம்மம், கலசம், தாடி, கும்பம், பலகை, பொதிகை முதலிய அமைப்புகளெல்ல்லாம் உடைய சிற்பங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கோவிலில் உள்ள மூர்த்திகள் எல்லாம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குவதைக் காணலாம்.

மேற்கூறிய ஏகாம்பரநாதர் கோவிலில் சிற்பங்கள் கலைஞர்களுக்கேயன்றி வரலாற்றிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும், பொது மக்களுக்கும் அருங்கலைப் பொருளையும் மட்டுமின்றி மூலச் சான்றுகளாகவும் விளாங்குகின்றன. கோவிலில் சிற்பக்கலையை அடுத்து ஓவியக்கலையை நோக்குவோம்.

ஓவியக்கலை

தூரிகைகளால் அற்புதமான உருவங்களை உருவாக்குவது அக்கால மக்களுக்கும் அரசர்களுக்கும் கை வந்த கலையாக இருந்துள்ளது.

மக்களுடன் அரச மரபில் வந்தவர்களும், குறிப்பாகப் பல்லவ மன்னர்களும் ஓவியக் கலையைப் பொழுது போக்காகக் கருதினர். அதனால் ஓவியக் கலையின் நுட்பம் நாளுக்கு நாள் பெருகிய தெனலாம்.

மகேந்திர பல்லவன் "விசித்திர சித்தன்" 'சித்திரக்கார புலி' என்ற பட்டப் பெயர்களால் அழைக்கப்பட்டதை வரலாற்றின் வாயிலாக அறிகிறோம். மகேந்திரவர்மன் எழுதிய தட்சிண சித்ரா என்ற ஓவியக்கலை நூல் நமக்கும் இன்று கிடைக்கவில்லை.

ஏகாம்பரநாதர் கோவிலில் ஓவியக்கலை பல்லவர் காலத்திலும் சோழர் காலத்திலும் சிறந்து விளங்கியதற்குச் சான்றுகள் கிடைக்கவில்லை. விசயநகர மன்னர்களின் ஓவியங்களே ஆங்காங்கு சில இடங்களில் காணப்படுகின்றன.

விசயநகர மன்னர் காலத்தில் திருக்கோவிலின் ஆயிரக்கால் மண்டபத்திலுள்ள விதானத்தில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டன. அவ்வோவியங்கள் இன்று அழிந்து காணப்பட்டாலும் விசய நகர அரசர்கள் காலத்து ஓவியங்களில் கலைத்திறனை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன ஏகாம்பரநாதர் சந்நிதியை அடுத்து வடக்குப் பக்கம் காணப்படும் முதல் திருச்சுற்று மாளிகையில் விசயநகர அரசர்கள் காலத்து ஓவியங்கள் காணப்படுகின்றன. விசயநகர மன்னர்கள் காலத்து ஓவியத்துக்கே உரிய மஞ்சள், காவி, கருமை ஆகிய நிறங்கள் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளன. இங்கு உள்ள உருவங்களின் விழிகள் நீண்டும், உருவங்கள் பக்கவாட்டிலும் காணப்படுகின்றன.

மேற்கூறியவற்றுடன் ஆயிரக்கால் மண்டபத்தின் முன்னால் உள்ள யானைக் கட்டி மண்டபத்தின் விதானத்திலும் வண்ண ஓவியம் காணப்படுகிறது. இதை மேற்போக்காகக் பார்த்தால் விசய நகர மன்னர் காலத்துக்கு அடுத்து நாயக்கர் கால ஓவியம் மட்டும் கண்ணுக்குப் புலப்படும். ஆழ்ந்து பார்த்தால் விசய நகர மன்னர்களின் ஓவியங்களையும் பழுதடைந்த நிலையில் சில இடங்களில் காணலாம்.

கோவிலில் நடராசர் சந்நிதியை அடுத்து வடக்கில் திருச்சுற்று மாளிகையில் ஒரு பகுதி கவனிப்பார் இல்லாமல் இருந்து வந்தது. இவ்விடத்தில் மரங்களும் முட்செடிகளும் வளர்ந்ததோடு மனிதர்கள் உள்ளே புக முடியாமல் மண்டிக் கிடந்தது.

தமிழ்நாடு அரசு தொல் பொருள் ஆய்வுத் துறையும், தமிழ்நாடு அரசு தேசிய மாணவர் படையைச் சேர்ந்த காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுடன் ஒருங்கு சேர்ந்து 1977-ஆம் ஆண்டு கோவிலில் மண்டிக்கிடந்த பகுதியைச் சீர்திருத்தம் செய்தனர். அவ்வாறு செய்கையில் இங்குள்ள திருச்சுற்று மாளிகையின் விதானத்தில் விசய நகர மன்னர்கள் காலத்து வண்ண ஓவியத்தைக் காணமுடிந்தது. //// 1956-ஆம் ஆண்டு ஏகாம்பரநாதர் கோவிலை ஆய்வாளார் திரு மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் பார்வையிட்டதைத் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். அஃதாவது ஏகாம்பரநாதர் கோவிலில் பவித்திர மண்டபத்தில் அன்னப்பறவை, மயில், பார்வதி, பரமேசுவரன், இலக்குமி, கலைமகள் முதலிய ஓவியங்களின் சிதைவுகளைத் தாமே கண்டதாகக் கூறியுள்ளார். அவை சிறிது அழிந்து போயிருந்தாலும் பெரிதும் நன்னிலைமையிலேயே இருந்தனவாம். கோயிலார் வண்ணாங்கள் அழிந்து போன இடங்களில் கோடுகளை புனையா ஓவியமாக நிறைவு செய்திருநதனர் என்று குறிப்பிட்டுள்ளார். அவை பிற்காலத்து ஓவியங்கள்தான் என்று அவர் அறிவித்துள்ளார். ஏகாம்பரநாதர் கோவிலின் அமைப்பு, சிற்பக்கலை, ஓவியக்கலை என்பன பற்றி மேலே பார்த்தோம்;. அடுத்து கோவிலின் உடைமைகளையும் ஆட்சி முறையையும் குறித்த செய்திகளைக் காணலாம்.

காஞ்சியில் அன்னை காமாட்சி செய்த அறங்கள்

1. ஆதுலர்க்குச் சாலையமைத்தல்
2. ஓதுவார்க்கு உணவு
3. அரு சமயத்தினர்க்கு உண்டி
4. பசுவுக்கு வாயுறை
5. சிறையிலுள்ளோர்க்குச் சோறு
6. ஐயம் இடுதல்
7. திண்பண்டம் நல்கல்
8. அறவைச் சோறு
9. மகப்பேறு வித்தல்
10. மகவு வளர்த்தல்
11. மகப்பால் வளர்த்தல்
12. அறவைப் பிணஞ்சுடுதல்
13. அறவைத் தூரியம்
14. கண்ணம் தருதல்
15. நோய்க்கு மருந்து
16. வண்ணார்க்கு உதவுதல்
17. நாவிதர்க்கு உதவுதல்
18. கண்ணாடி தருதல்
19. காதோலை தருதல்
20. கண்மருந்து தருதல்
21. தலைக் கெண்ணெய் தருதல்
22. பெண்போகம்
23. பிறர்துயர் காத்தல்
24. தண்ணீர்ப்பந்தல் அமைத்தல்
25. மடம் கட்டுதல்
26. குளம் அமைத்தல்
27. சோலை
28. ஆவுடிஞ்ச தறி அமைத்தல்
29. விலங்கிற்குணவு தரல்
30 ஏறு விடுத்தல்
31. விலை கொடுத்துயிர் காத்தல்
32. கன்னிகாதானம்

பங்குனி உத்திரப் பெருவிழா விவரம்

நாள் காலை மாலை

1. கொடியேற்றம் - விநாயகர் உற்சவம், சிம்மம், கிளி வாகனம்
2. சூர்யப்பிரபை - சந்திரப்பிரபை, அன்னவாகனம்
3. பூதவாகனம் - சின்ன காஞ்சிபுரம் எழுந்தருளல் (ஏசல்)
4. நாகவாகனம் - வெள்ளி இடப வாகனம்
5. வெள்ளி அதிகார நந்தி சேவை - கைலாசபீட இராவணேகவரன் வாகனம்
6. அறுபத்து மூவர் - வெள்ளித் தேர்
7 .............. - இராதோற்சவம்
8. ஆறுமுகசுவாமி எடுப்புத்தேர் - பிச்சாடனர் குதிரை வாகனம்
9. ஆள்மேல் பல்லக்கு - வெள்ளி மாவடி சேவை
10. சபாநாதர் தரிசனம், அம்பிகை ஒக்கப் பிறந்தநாள் குளத்திற்கு ஏழுந்தருளல் - பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்
11. கந்தபொடி வசந்தம் - புண்ணிய கோடி விமானம்
12. புருஷ மிருகவிமானம் - பஞ்ச மூர்த்தி உலா
13. தீர்த்தவாரி (சர்வ தீர்த்ததில்) - யானை வாகனம் கொடியிற்காலம்
14. 108 கலச அபிஷேகம், 108 சங்கு அபிஷேகம், திருமுறை விழா

திருவிழா நாட்களில் மாலையில் நாதஸ்வரக் கச்சேரியும், இன்னிசையும், தேவார பாராயணமும் சமயச் சொற்பொழிவுகளும் நடைபெறும்.

திருமணத்திற்குப் பிறகு அம்பிகை ஊடல் கொள்வாள்.

அதனால் பதினோறாம் நாள் இரவு அவர்களுடைய திருமேனிகள் ஒன்றோடொன்று எதிர்நோக்கிய வண்ணம் வன்னியகுல க்ஷத்திரிய மகாசங்க சத்திரம் வரை எழுந்தருளும், அங்குச் சுந்தரமூர்த்தி சுவாமி அவர்களுடைய ஊடலைத் தீர்த்து வைப்பார். இத்திருவூடலுற்சவம். இக்கோயிற்கே உரிய தனிச்சிறப்பு வாய்ந்தது.

"இலங்கையரசைத் துலங்கவூன்றும்
நலங்கொள் கம்பன் இலங்கு சரணே"

திருவேகம்பத் தனிச்சிறப்பு

திருக்கைலாய மலையில் எழுந்தருளி உலகைக் காக்கும் எம்பெருமான் உலந்து வந்து எம்பெருமாட்டிற்குக் காட்சி தந்த இடம் காஞ்சியம்பதியே ஆகும். இறைவன் காமாட்சிக்குக் காட்சி தந்த தோற்றம் கம்பவடிவு என்றும் கூறுவர். எனவே, அத்தோற்றத்தின் காரணமாகவே கம்புன் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்ப்பட்டது என்பது வழக்காறு. ஒப்பற்ற ஓர் கம்ப வடிவிலே காட்சி தந்ததினால் ஏ-கம்பன் ஏகம்பன் என்றாயிற்று. எனவே தான், கம்பன் என்ற பெயர் மூர்த்தி, தலம், நதி, ஆகிய மூன்றுக்கும் வழங்குவதாயிற்று. இந்த மூன்றனையும் வணங்குதல் வினையறுக்கும் என்று சம்பந்தர் கூறியதைக் காணலாம்.

"கருவார் கச்சித்திருவேகம்பத்
தொருவா வென்ன மருவா வினையே.
மதியார் கச்சி நதியே கம்பம்
விதியால் ஏத்தப் பதியாவாரே
கலியார் கச்சி மலியே கம்பம்
பலியாற் போற்ற நலியா வினையே".

திருஞான சம்பந்தரின் இவ்வாக்கினால் வினையின் நீங்கி, விளங்கிய அறிவராகிய ஏகம்பரைத் தொழுவதால் வல்வினை அண்டாது என்பதும் ஏற்ற நல்வாழ்வினை அடைவது அவன் அருளாலே என்பதும் அப்பெருமானைப் போற்றித் துதிக்க கூரும் வினைகளால் ஏற்படக்கூடிய துன்ப நலிவு இல்லை என்பதும் கண்கூடு.

இறைபக்தி உடல் நோயைப் போக்கும் மாமருந்து என்பது இக்காலத்தில் கண்டறியப்பட்ட ஒன்று ஆகும். ஆனால், சம்பந்தப் பெருமான் அருள் வாக்கால் முற்காலத்திலேயே பக்தியினால் நலிவு - உடல் உள்ளத் துன்பம் அணுக்காது என்பதனை எடுத்துக்காடி நல்வாழ்வுக்குப் பற்றுக்கோடு அவனே என்பதைப் புலப்படுத்தி உள்ளன எண்ணி மகிழ்ற்பாலது.

திருக்கயிலை தாதனே காஞ்சித் திருவேகம்பன்

கயிலாய நாதனே காஞ்சியில் வந்து திருவேகம்பமேயினான் என்பதனை அப்பாடிகள்

"கச்சிப்பலதளியும் ஏகாம்பத்தும் உயிலாய நரதனையே காணலமே"

என்று ஷேத்திரக் கோவியிலும்.

திருநாரையூர்ப் பாடலில்

"...................... மதிற்கச்சி மன்னுகின்ற கம்பனை எம் கயிலாய மலையன் தன்னை"

என்று கூறும் மகத்தாலும்

திருவையாற்றில் பாடுங்கால்

"கச்சியேகம்பனே என்றேன் நானே கயிலாய காரோணா என்றேன் நானே"

என்று பாடியுள்ளமையாலும் தெரிந்து மகிழலாம்.

வருவாய் வழிகள்

இத்திருக்கோயிலின் நிர்வாகத்திற்காக நிலங்கள், மனைகள், கட்டிடங்கள் மற்றும் கட்டணச்சீட்டு விற்பனை ஆகியவற்றின் மூலமாண்டு வருமானமாக ரூபாய் பதினைந்து லட்சத்திற்கு மேல் வருவாய் வருகின்றது.

கோடி தீபம்

ஓளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே என்று கருவூர்த் தேவரும், சோதியே, சுடரே,சூழொளி விளக்கே என்று மாணிக்கவாசகப் பெருமானும் இறைவனை ஒளிவடிவில் நினைந்துருகிப் பாடியுள்ள்னர். அக்காலத்தில் இறைவனை ஒளிவடிவில் வழிபடுவதும் மரபாக இருந்தது. எனவே, தான் நாமும் தீபாவளித் திருநாள், கார்த்திகை தீபத்திருநாள் போன்ற நாட்களில் தீபம் ஏற்றி வழிபடுகிறோம். எங்குமு நீக்கமற நிறைந்துள்ள இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த வழிபாடு ஆகும்.

இதன் அடிப்படையில் இத்திருக்கோயிலில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையின் ஆணையர் உத்தவின்படி 13-12-99 அன்று முதல் கோடிதீபம் ஏற்றுதல் தொடங்கி நடந்தேறி வருகிறது.

அன்பர்கள் அனைவரும் அவரவர்களின் வேண்டுதலுக்கேற்ப தீபம் ஏற்றி எல்லாம் வல்ல எம்பெருமானின் அருட்பெருங்கருணைக்கு உரியவர்கள் ஆகின்றனர்.

ஒன்று, மூன்று ஒன்பது, நூற்றெட்டு, ஐநூற்றொன்று ஆயிரத்தெட்டு என்ற வரிசையில் அவரவர் பிரார்த்தனைக்கேற்ப தீபம் ஏற்றி வழிபடலாம்.

பக்தர்கள் அனுப்பும் பணிடைகள், வளரவோலைகள் காசோலைகள் ஆகியவற்றை நிர்வாக அதிகாரி,அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில், காஞ்சிபுரம் 631 502 என்ற முகவரிக்கு அனுப்பி, உரிய ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

Post your comments to Facebook