மூலவர்
ஏகாம்பரநாதர் கோயில்

திருக்கச்சியேகம்பத் திருப்பதிகங்கள்

சம்பந்தர் தேவாரம்

பண்-மேகராகக்குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி
நூலொருபால் பொருந்தக்
கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற்
கச்சி தன்னுள்
அந்தமில் குணத்தார் அவர்போற்ற
அணங்கினோடு ஆடல்புரி
எந்தை மேவிய ஏகம்பம்
தொழுதேத்த இடர்கெடுமே.

வரந்திகழும் அவுணர் மாநகர்மூன்று
உடன்மாய்ந்து அவியச்
சரந்துந்து எரிசெய்த தாழ்சடைச்
சங்கரன் மேயைடம்
குருந்தம் மல்லிகை கோங்குமா
தவி நல்ல குராமரவம்
திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பகஞ்
சேர இடர்கெடுமே.

வண்ணவெண் பொடிப்பூசு மார்பின்
வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந்து எரியாடல் பேணிய
பிஞ்ஞகன் மேயவிடம்
விண்ணமர் நெடுமாடம் ஓங்கி
விளங்கிய கச்சிதன்னுள்
திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ்
சேர இடர்கெடுமே.

தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற்
கடலைவெண் ணீ றணிந்து
காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த
கடவுள் கருதுமிடம்
மாலைவெண் மதிதோயும் மாமதிற்
கச்சி மாநகருள்
ஏலநாறிய சோலைசூழ் ஏகம்பம்
ஏத்த இடர்கெடுமே.

தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத்
தூமதி யம்புனைந்து
பாடல்நான் மறையாகப் பல்கணப்
பேய்கள் அவைசூழ
வாடல்வெண்த லையோடு அனலேந்தி
மகிழ்ந்துடன் ஆடல்புரி
சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பஞ்
சேர இடர்கெடுமே.

சாகம்பொன் வரையாகத் தானவர்
மும்மதில் சாயவெய்து
ஆகம்பெண் ஒருபாக மாக
அரவொடு நூலணிந்து
மாகந்தோய் மணிமாட மாமதிற்
கச்சி மாநகருள்
ஏகம்பத் துறையீசன் சேவடி
யேத்த இடர்கெடுமே.

வாணிலா மதிபுல்கு செஞ்சடை
வாளர வம் அணிந்து
நாணிடத் தினில்வாழ்க்கை பேணி
நகுதலையிற் பலிதேர்ந்து
ஏணிலா அரக்கந்தன் நீள்முடி
பத்தும் இறுத்தவனூர்
சேணுலாம் பொழிற்கச்சி யேகம்பஞ்
சேர இடர்கெடுமே.

பிரமனுந் திருமாலுங் கைதொழப்
பேரழல் ஆயபெம்மான்
அரவஞ் சேர்சடை அந்தணன்
அணங்கினொடு அமருமிடம்
கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக்
கச்சி மாநகருள்
மரவஞ்சூழ் பொழில் ஏகம்பந்தொழ
வல்வினை மாய்ந்தறுமே.

குண்டுபட்டு அமணாய் அவரொடுங்
கூறைதம் மெய்போர்க்கும்
மிண்டர் கட்டிய கட்டுரை
அவைகொண்டு விரும்பென்மின்
விண்டவர் பரம்மூன்றும் வெங்கனண
ஓன்றினால் மாய்ந்து அவியக்
கண்டவன் கலிக்கச்சி யேகம்பங்
காண இடர்கெடுமே.

ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி
யேகம்பம் மேயவனைக்
கார்னார் மணிமாடம் ஓங்கு
கழுமல் நன்னகருள்
பாரினார் தமிழ்ஞான சம்பந்தன்
பரவிய பத்தும்வல்லார்
சீரினார் புகழோங்கி விண்ணவ
ரோடுஞ் சேர்பவரே.

பண் இந்தளம்
திருச்சிற்றம்பலம்

மறையானை மாசிலா புன்சடை மல்குவெண்
பிறையானைப் பெண்ணொடு ஆணாகிய பெம்மானை
இறாய்யானை யேர்கொள்கச் சித்திரு வேகம்பத்
துறைவானை யல்லதூள் காதெனது உள்ளமே.

நொச்சியே வன்னிகொன் றைமதி கூவிளம்
உச்சியே புனைதல்வே டம்விடை யூர்தியான்
கச்சியே கம்பம்மே யகறைக் கண்டனை
ந்ச்சியே தொழுமின்நும் மேல்வினை நையுமே.

பாராரு முழமொந் தைகுழல் யாழொலி
சீராலே பாடல் ஆடல்சிதை வில்லதோர்
ஏரார்பூங் கச்சியே கம்பனை யெம்மானைச்
சேராதார் இன்பமா யந்நெறி சேராரே.

குன்றாஎய்க்கு நெடுவெண்மா டங்கொடி கூடிப்போய்
மின்றேய்க்கும் முகில்கள்தோ யும்வியன் கச்சியுள்
மன்றேய்க்கு மல்குசீ ரான்மலி யேகம்பம்
சென்றேய்க்குஞ் சிந்தையார் மேல்வினை சேராவே.

சடையானைத் தலைகையேந் திப்பலி தருவார்தம்
கடையேபோய் மூன்றுங்கொண் டாங்கலிக் கச்சியுள்
புடையேபொன் மலருங்கம் பைகரை யேகம்பம்
உடையானை யல்லதுள் காதென் துள்ளமே.

மழுவாளோடு எழில்கொள்சூ லப்படை வல்லார்தம்
கெழுவாளோர் இரிமையாருச் சியுமை யாள்கங்கை
வழுவாமே மல்குசீ ரால்வள ரேகம்பம்
தொழுவாரே விழுவியார் மேல்வினை துன்னாவே.

விண்ணுளார் மறைகள்வே தம்விரித்து ஓதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவார் எழில்கொள்கச் சிநகர் எகம்பத்து
அண்ணலார் ஆடுகின் ற அலங் காரம்மே.

தூயானைத் தூயவா யம்மறை யோதிய
வாயானை வாளரக் கன்வலி வாட்டிய
தீயானைத் தீதில்கச் சித்திரு வேகம்பம்
மேயானை மேவுவார் எந்தலை மேலாரே.

நாகம்பூண் ஏறதே றல்நறுங் கொன்றைதார்
பாகம்பெண் பலியுமேற் பர்மறை பாடுவர்
ஏகம்பம் மேவியா டும் இறை இருவருக்கும்
மாகம்பம் அறியும்வண் ணத்தவன் அல்லனே.

போதியார் பிண்டியார் என்றிவர் பொய்ந்நூலை
வாதியா வம்மின் அம்மாவெனுங் கச்சியுள்
ஆதியார் மேவியா டுந்திரு வேகம்பம்
நீதியால் தொழுமின்நும் மேல்வினை நில்லாவே.

அந்தண்பூங் கச்சியே கம்பனை யம்மானைக்
கந்தண்பூங் காழியூ ரங்கலிக் கோவையால்
சந்தமே பாடவல் லதமிழ் ஞானசம்
பந்தன்சொற் பாடியா டக்கெடும் பாவமே

- திருச்சிற்றம்பலம்

திருவிருக்குக்குறள் பண்- கொல்லி திருச்சிற்றம்பலம்

கருவார் கச்சித், திருவே கம்பத்து
ஒருவா வென்ன, மருவா வினையே.

மதியார் கச்சி, ந்தியே கம்பம்
விதியா லேத்தப், பதியா வாரே.

கலியார் கச்சி, மலியே கம்பம்
பலியார் போற்ற, நலியா வினையே.

வரமார் கச்சிப், புரமே கம்பம்
பரவா ஏத்த, விரவா வினையே.

படமார் கச்சி, இடமே கம்பத்து
உடையா யென்ன, அடையா வினையே.

நலமார் கச்சி, நிலவே கம்பம்
குலவா வேத்தக், கலவா வினையே.

கரியின் உரியின், திருவே கம்பன்
பெரிய புரமூன், றெரிசெய் தானே.

இலங்கை யரசைத், துலங்க வூன்றும்
நலங்கொள் கம்பன், இலங்கு சரணே.

மறையோன் அரியும், அறியா அனலன்
நெறியே கம்பம், குறியால் தொழுமே.

பரியாத் தேரர், நெறியில் கச்சிச்
செறிகொள் கம்பம், குறுகு வோமே.

கொச்சை வேந்தன், கச்சிக் கம்பம்
மெச்சுஞ் சொல்லை, நச்சும் புகழே.

- திருச்சிற்றம்பலம்.

திருவியமகம் பண்- பழம்பஞ்சுரம் திருச்சிற்றம்பலம்

பாயுமால்விடை மேலொரு பாகனே
பாதைதன்னுஎஉ மேலொரு பாகனே
தூயவானவர் வேதத் துவனியே
சோதிமாலெரி வேதத் துவனியே
ஆயுநன்பொருள் நுண்பொரு ளாஅதியே
ஆலநீழல் அரும்பொரு ளாதியே
காயவின்மதன் பட்டது கம்பமே
கண்ணுதற்பர மற்கிடங் கம்பமே.

சடையணிந்ததும் வெண்டலை மாலையே
தம்முடம்பிலும் வெண்டலை மாலையே
படையிலங்கையிற் சூலம தென்பதே
பரந்திலங்கையிற் சூலம தென்பதே
புடைபரப்பன பூதக ணங்களே
போற்றிசைப்பன பூதகணங்களே
கடைகள்தோறும் இரப்பது மிச்சையே
கம்பமேவியி ருப்பது மிச்சையே

வெள்ளெருக்கொடு தும்பை மிலைச்சியே
வேறுமுன்செலத் தும்பை மிலைச்சியே
அள்ளிநீறது பூசுவ தாகமே
யானமாகன மூகவ தாகமே
புள்ளியாடை யுடுப்ப துகத்துமே
போனவூழி யுடுப்பு துகத்துமே
கள்ளுலாமலர்க் கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

முற்றலாமை யணிந்த முதல்வரே
மூரியாமை யணிந்த முதல்வரே
பற்றிவாளர வாட்டும் பரிசரே
பாலுநெய்யுகந் தாட்டும் பரிசரே
வற்றலோடு கலம்பலி தேர்வதே
வானினோடு கலம்பலி தேர்வதே
கற்றிலாமனங் கம்ப மிருப்பதே
காஞ்சிமா நகர்க் கம்ப மிருப்பதே.

வேடனாகி விசையற்கு அருளியே
வேலைநஞ்ச மிசையற்கு அருளியே
ஆடுபாம்பரை ஆர்த்த துடையதே
அஞ்சபூதமும் ஆர்த்த துடையதே
கோடுவான்மதிக் கண்ணி அழகிதே
குற்றமின்மதிக் கண்ணி அழகிதே
காடுவாழ்பதி யாவது மும்மதே.

இரும்புகைக்கொ டிதங்கழல் கையதே
இமயமாமகன் தங்கழல் கையதே
அரும்புமொய்த்த மல்ர்பொறை தாங்கியே
ஆழியான்றன் மலர்பொறை தாங்கியே
பெரும்பகல் நட மாடுதல் செய்துமே
பேதைமார்மனம் வாடுதல் செய்துமே
கரும்புமொய்த்தெழு கம்ப மிருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

முதிர மங்கை தவஞ்செய்த காலமே
முன்புமங்கை தவஞ்செய்த காலமே
வெதிர்ளோடகில் சந்தமு ருட்டியே
வேழமோடகில் சந்தமு ருட்டியே
அதிரவாறு வரத்தழு வத்தொடே
ஆன்நெய்ஆடு வரத்தழு வத்தோடே
கதிர்கொன்பூண்முலைக் கம்பம் இருப்பதே
காஞ்சிமாநகர்க் கம்ப மிருப்பதே.

பண்டரக்கன் எடுத்த பலத்தையே
பாய்ந்தரக்கன் எடுத்த பலத்தையே
கொடைரக்கிய துங்கால் விரலையே
கோளரக்கிய துங்கால் விரலையே
உண்டுழன்றது முண்டத் தலையிலே
உடுபதிக்கிட முண்டத் தலையிலே
கண்டநஞ்சம் அடக்கினை கம்பமே
கடவுள் நீயிடங் கொண்டது கம்பமே.

தூணியான சுடர்விடு சோதியே
சுத்தமான சுடர்விடு சோதியே
பேணியோடு பிரமப் பறவையே
பித்தனான பிரமப் பறவையே
சேணினோடு கீழுழி திரிந்துமே
சித்தமோடு கீழுழி திரிந்துமே
காணநின்றனர் உற்றது கம்பமே
கடவுள்நீயிடம் உற்றது கம்பமே

ஒருடம்பினை யீருரு வாகவே
உன்பொருட்டுதிறம் ஈருரு வாகவே
ஆருமெய்தற் கரிது பெரிதுமே
ஆற்றவெய்தற் கரிது பெரிதுமே
தோரும்மறி யாதுதி கைப்பரே
சித்தமும்மறி யாதுதி கைப்பரே
கார்நிறத்தம ணர்க்கொரு கம்பமே
கடவுள் நீயிடங் கொண்டது கம்பமே

கந்தமார் பொழில் சூழ்தரு கம்பமே
காதல் செய்பவர் தீர்த்திடு கம்பமே
புந்திசெய்து விரும்பிப் புகலியே
பூகரன்றன் விரும்பிப் பகலியே
அந்தமில்பொரு ளாயின கொண்டுமே
அண்ணலின்பொரு ளாயின கொண்டுமே
புந்தன் இன்னியல் பாடிய பத்துமே
பாடவல்லவ ராயின பத்துமே.

நாவுக்கரசர் தேவாரம் பண் - காந்தாரம்

கரவாடும் வன்னெஞ்சர்கு அரியானைக் கரவார்பால்
விரலாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடவ் வடைதாழ் அங்கையினில் அனலேந்தி
இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.

தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன செழும்பவளம்
தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை
வானோர்க்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.

கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள்
முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை
அப்போது மல்ர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி
எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.

அண்டமாய் ஆதியாய் ஆருமறையோடு ஐம்பூதப்
பிண்டமாய் உலகுக்கொரி பெய்பொருளாம் பிஞ்ஞகனைத்
தொண்டர்தாம் மலர்தூவிச் சொல்மாலை புனைகின்ற
இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே.

ஆறேறு சடையானை ஆயிரம்பேர் அம்மானைப்
பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை
நீறேறு திருமேனி நின்மலை நெடுந்தூவி
ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.

தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலால்
பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண்
வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம்
ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.

நல்லானை நல்லான நான்மறையோடு ஆறங்கம்
வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச்
சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் தூகளேதும்
இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.

விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
பிரிந்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத்
தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும்
எரித்தானை எம்மானை எம்மனத்தே வைத்தேனே.

ஆகம்பத்து அரவணையான் அயன் அறிதற்கு அரியானைப்
பாகம்பெண் ஆண்பாக மாய்நின்ற பசபதியை
பாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே.

அடுத்தானை உரித்தானை அருச்கனற்குப் பாகபதம்
கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு
தொடுத்தானைப் புரமொரியச் சுனைமல்கு கயிலாயம்
எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேன்.

திருநேரிசை

நம்பனை நகர மூன்றும் எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை யாற்றை அணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் திங்கட செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்ப்ன்னைப் பவளத் தூணைச் சிந்தியா எழுகின் றேனே.

ஒருமுழம் உள்ள குட்டம் ஒன்பது துறையு டைத்தாய்
அரைமுழும் அதன் அகலம் அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றி கிடந்தநான் பிதற்று கின்றேன்.
கருமுகில் தவழும் மாடக் கச்சிஏ கம்பனீரே.

மலையினார் மகளோர் பாக மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றும் தீஎழச் செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்குந் தலைவர் தாமே.

பூத்தபொற் கொன்றை மாலை புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத் திருமுடி திகழ் வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவி னாரை
வாழ்த்துமாறு அறிய மாட்டேன் மால்கொடு மயங்கி னேனே.

மையினார் மலர்நெ டுங்கண் மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபலம் ஏந்திக் கடைதோறும் பலிகொள்
ஏய்வதோர் ஏனம் ஓட்டு ஏகம்பம் மேவி நாரைக் ( வார்தாம்
கையினால் தொழவல் லார்க்குக் கடுவினை களைய லாமே.

தருவினை மருவுங் கங்கை தங்கிய சடையன் எங்கள்
அரிவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றுந்
திருவினைத் திருவே கம்பஞ் செப்பிட உறைய வல்ல
உரிவினை உருகி ஆங்கே உள்ளதால் உகக்கின் றேனே.

கொண்டதோர் கோல மாகிக் கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகில் உலகெலாம் உய்ய உண்டான்
எண்டிசை யோரும் ஏத்த நின்றஏ கம்பன் தன்னைக்
கண்டுநான் அடிமை செய்வான் கருதியே திரிகின் றேனே.

படமுடை அரவி னோடு பனமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக் கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடை கச்சி தன்னுள் ஏகம்பம் மேவி னான்றன்
நடமுடை யாடல் காண ஞாலந்தான் உய்த்த வாறே.

பொன்றிகழ் கொன்றை மாலை பொருந்திய நெடுத்தண் மார்பர்
நன்றியில் புகுந்தென் னுள்ளம் மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக் குவளையங் கண்டர் எம்மை
இன்துயில் போது கண்டார் இனியர்ஏ கம்ப னாரே.

துருத்தியார் பழனத் துள்ளாஅர் தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க்கு அருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார் வல்லவினை மாயு மன்றே.

Post your comments to Facebook